எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday, 27 December 2024

படித்ததில் பிடித்தவை (“பள்ளத்து வீடுகள்” – காளிங்கராயன் கவிதை)


*பள்ளத்து வீடுகள்*


“எனக்கெட்டு வயசிருக்கும்

எங்களை விட்டு அப்பா 

ஓடிப்போன பொழுது.


பத்து வயதில் படிப்பை 

நிறுத்திவிட்டுப்

பள்ளத்து வீடுகளுக்குப் 

பலகாரம் விற்றுவர 

அம்மா அனுப்பினாள்.


ஊரை விட்டொதுங்கிய

சரவணா டாக்கீஸின்

பின்புறத்துக் குடிசைகளைத்தான் 

பள்ளத்து வீடுகளென்போம்.


அந்த வீடுகளில்

எப்போதும் பெண்களின் 

ராஜ்ஜியந்தான்.


பகல் முழுக்க

பூவரச மர நிழலில்

வெற்றிலைச் சாறு தெறிக்க 

வம்பு பேசிச் சிரித்திருப்பார்கள்.


ஆண்கள் அவ்வப்போது

அவசர அவசரமாக

வந்து போவார்கள்...


பல வருசங்கழிந்து

பம்பாய்க்குப் பக்கத்திலிருந்து 

அப்பாவின் கடிதம் -

உடனே ஊருக்கு வருவதாக.


அப்பா வந்ததும்

அதட்டிக் கேட்கணும் -

பள்ளிக்குப் போகாமல்

பரத்தையர் வீடுகளில்

நான் பலகாரம் விற்றதற்கு 

நீ தானே காரணமென்று.


கூடவே -

பல நாள் பட்டினி கிடந்தும்

பிள்ளைகள் வளர்க்க வென்று

பள்ளத்தில் குடியேறாத 

அம்மாவின் பெருமை சொல்லி

ஆங்காரமாய்ச் சிரிக்கவும் 

வேணும்..!”

 

*காளிங்கராயன்*

(கணையாழி  ஏப்ரல் - 1994)



35 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *காளிங்கராயன்*

    ஆரம்ப காலங்களில்
    வத்சலகுமாரன்
    எனும் புனைப் பெயரிலும்
    தற்பொழுது காளிங்கராயன்
    எனும் புனைப் பெயரிலும்
    எழுதிக் கொண்டிருக்கும்
    திரு. சுரேஷ் அவர்கள்
    தமிழ்நாடு மின்சார
    வாரியத்தில் உதவி செயற்
    பொறியாளராக பணிப்
    புரிகிறார்.

    தொண்ணூறுகளில் தொடங்கி
    தமிழின் சிற்றிதழ்களில்
    கவிதைகள், விமர்சனங்கள்,
    மொழி பெயர்ப்புகள் என
    இயங்கி வருகிறார்.

    mathangi67.blogspot.com என்ற
    வலைப்பூவில் அச்சில்
    வந்தவைகளைப்
    பதிந்து வைத்திருக்கிறார்.

    இக்கவிதை (பள்ளத்து வீடுகள்)
    கணையாழி இதழில்
    எழுத்தாளர் சுஜாதா
    அவர்களால் தேர்வு
    செய்யப்பட்டு ஏப்ரல்
    1994-ல் பிரசுரிக்கப்பட்டது.

    தற்பொழுது பால்புதுமையினர்
    கவிதைகள் மற்றும்
    நேர்காணல்களைத்
    தொடர்ந்து மொழி பெயர்த்து
    வருகிறார்...

    சதங்கை
    உன்னதம்
    கனவு
    புதுவிசை
    புது எழுத்து
    யாதுமாகி
    சுந்தர சுகன்
    மவ்னம்
    வேட்கை
    கவிதாசரண்
    அம்மா (பிரான்ஸ்)
    எக்சில் (பிரான்ஸ்)
    தீராநதி (குமுதம்)
    இந்து தமிழ்திசை
    மணல்வீடு
    வெள்ளைக் குதிரை
    அணங்கு...

    போன்ற சிறுபத்திரிகைகளில்
    இவரது படைப்புகள்
    வெளிவந்து
    கொண்டிருக்கிறது.
    இறுதியாக அவற்றைத்
    தொகுத்து வெளியிடும்
    திட்டமும் உள்ளது.

    ReplyDelete
  2. செந்தில்குமார். J28 December 2024 at 07:18

    அருமை.
    👌

    ReplyDelete
  3. அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. செல்வம். K.P28 December 2024 at 07:52

    👌

    ReplyDelete
  5. சதீஷ், விழுப்புரம்.28 December 2024 at 08:02

    🙏

    ReplyDelete
  6. வெங்கட்ராமன், ஆம்பூர்.28 December 2024 at 08:03

    👍👍💐💐🙏🏻🙏🏻

    ReplyDelete
  7. Venkat, Vaishnavi Nagar.28 December 2024 at 08:05

    Continue your
    good postings
    sir. 👍

    ReplyDelete
  8. பிரபாகரன்28 December 2024 at 08:07

    👌

    ReplyDelete
  9. அம்மையப்பன்28 December 2024 at 08:19

    👍

    ReplyDelete
  10. 🙏
    👌👌👌

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் 🙏🙏🙏

    ReplyDelete
  12. ஆறுமுகம்28 December 2024 at 09:05

    மனதை தொட்ட கவிதை.
    💐

    ReplyDelete
  13. அருள்ராஜ்28 December 2024 at 09:07

    👏

    ReplyDelete
  14. செல்லதுரை28 December 2024 at 09:45

    👌

    ReplyDelete
  15. ரவிசந்திரன்28 December 2024 at 10:00

    👍

    ReplyDelete
  16. அருமை 👍

    ReplyDelete
  17. ஶ்ரீராம்28 December 2024 at 12:02

    மிக அருமை.

    ReplyDelete
  18. பாலசுப்ரமணியன்28 December 2024 at 12:13

    👍

    ReplyDelete
  19. Super.
    👏

    ReplyDelete
  20. தங்கள் பகிர்விற்கு அன்பும் நன்றியும் சார்...💙💙 தம் கருத்துகளைப் பதிவிட்ட தோழமைகள் அனைவர்க்கும் மிகுந்த நன்றிகள் .🙏.

    ReplyDelete
    Replies
    1. கவிதாசிரியர்
      அவர்களுக்கு...

      தங்களின் கவிதையை
      இத்தளத்திற்காக
      பகிர்ந்தமைக்கு
      மிக்க நன்றி.
      🙏

      சிறந்த கவிதைகள்
      எப்போதுமே
      அதன் உச்சத்தை
      கண்டடைந்து விடும்..!

      Delete
    2. காளிங்கராயன்29 December 2024 at 13:36

      🩷

      Delete
  21. வாழ்த்துக்கள் தோழர்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழர்

      Delete
  22. Oh suresh sir?
    Nice sir,
    We don't know sir.
    Great writer, poet.
    👌

    ReplyDelete
    Replies
    1. நன்றி மேடம்

      Delete
  23. மிக்க நன்றி ராம்

    ReplyDelete
  24. Heart touching one.

    ReplyDelete