*தற்கொலைக்கு தயாராகுபவன்*
“தற்கொலைக்கு தயாராகுபவன்
பித்து
நிலையில்
என்னென்னவோ
செய்கிறான்.
அவன் கையில்
குடும்ப
புகைப்படமொன்று
கிடைக்கிறது.
அதிலிருந்து
தனியே தன்னுருவை
பிரித்தெடுக்கும்
முயற்சியில்
கத்தரிக்க
துவங்குகிறான்.
எவ்வளவு
நுட்பமாக செயல்பட்டும்
கைகோர்த்திருக்கிற
தங்கையின்
சுண்டுவிரல் நுனி
கூடவே
வருவேனென்கிறது..!”
*முத்துவேல்*
No comments:
Post a Comment