*அம்மாவின் கை*
“ஊருக்குப் போய் திரும்பிய அம்மா
குழந்தைகளின் முகத்தைப் பார்க்கிறாள்
குழந்தைகள் கையைப் பார்க்கின்றன
தூக்கி வளர்த்த கையை
சோறூட்டிய கையை
தலை வாரிவிட்ட கையை
தாலாட்டுக்கேற்பத் தட்டிய கையை
தகப்பன் அடிக்க வர
தடுக்க வந்த கையை
அம்மாவின் கை அப்படியேதானிருக்கிறது
குழந்தைகளின் கண்கள்தான்
மாறிவிடுகின்றன சமயத்திற்கேற்ப..!”
*யுகபாரதி*
No comments:
Post a Comment