எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday, 10 June 2020

*மழைப் பேச்சு*


அலுவலகம் முடிந்து
வீட்டுக்கு செல்லும்போது
பெய்த சிறுமழைக்கு
ஒதுங்கியப் போதுதான்
முதன் முதலாக
பேச முடிந்தது...

மூன்று வருடத்துக்குமுன்
பக்கத்து வீட்டுக்கு
குடித்தனம் வந்தவருடன்..!”

       *கி.அற்புதராஜு*.

3 comments:

  1. நகர வாழ்க்கையில் பக்கத்து வீட்டுக்காரர் கூட அந்நியமாகி விடுகிறார்கள்.
    அருமையான கவிதை.

    ReplyDelete