*பூனை*
“வீதியில் சென்ற சிறுமி
சாலையைக்
கடக்க முயன்ற
பூனையைப்
பார்த்து நின்றாள்.
பூனையும்
நின்றது
அவளைப்
பார்த்து..!
யார்
முதலில்
குறுக்கிட்டுக்
கடப்பது என்ற
யோசனையில்
இருவரும்
தயங்கி நின்றனர்.
பிறர்பொருட்டு
நாம்
காட்டவேண்டிய
இத்தகைய
சிறு அக்கறைகளைத்தாம்
நாம்
என்றோ இழந்துவிட்டோம்..!”
*மகுடேசுவரன்*
No comments:
Post a Comment