எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday, 20 December 2013

முகமூடி

                                                                           
“முக்காடிட்டு
முழுவதுமாக
துணியால் மூடி
கருப்பு கண்ணாடியுடன்
இருசக்கர வாகனத்தின்
பின்னால் உட்கார்ந்து
செல்லும்
இளம்பெண்களை
யார் என்று
யாருக்கும் தெரிவதில்லை!

ஆனால்...
வாகனத்தை ஓட்டி
செல்பவர்...
சகோதரனாக இருந்தாலும்,
கணவனாக இருந்தாலும்,
காதலனாகவே
தோன்றும் எல்லோருக்கும்..!”

             -   K. அற்புதராஜு

2 comments:

 1. நான் இருபது வருடங்களுக்கு முன்பாக எழுதி வைத்திருந்த நான்கைந்து கவிதைகளைக் கண்ட என் நண்பரின் வற்புறுத்தலால் ஒன்றை அனுப்பினேன். கணையாழியில் பிரசுரமானது. அந்த இதழ் கூட இன்று என்னிடம் இல்லை. அப்போதெல்லாம் கணையாழியில் பிரசுரமானால் பெரிய கிரீடம் சூட்டியது போல இருக்கும்.

  உங்கள் கவிதைகளைக் காணும்போது அந்த நண்பர்தான் என் நினைவுக்கு வந்தார். இவை நிச்சயமாக பிரசுரத்துக்கு ஏற்றவை. சில பிரசுரங்களுக்கு அனுப்புவோம். இல்லாவிடில் நாமே பிரசுரிப்போம்.
  காலம் கடத்தாதீர்கள்.
  அன்புடன், பரந்தாமன்.

  ReplyDelete
  Replies
  1. நிறைய முறை ஆனந்தவிகடனுக்கு அனுப்பி பிரசுரம் ஆகவில்லை. முயற்சித்துக் கொண்டுதான் இருக்கிறேன். நன்றி நண்பரே..!

   Delete