*மெளத் ஆர்கன் வாசிக்கும் பெரியவர்*
“கைகள் நடுங்க
மெளத்
ஆர்கன் வாசித்துக்கொண்டிருந்த
முதியவரின்
அருகில் போய்
அமர்ந்தேன்.
இலைகள்
மிதந்து
மிதந்து
அவர்
இசை
கேட்டபடி
அருகில்
வந்து விழுந்தன.
மெளத் ஆர்கன்
ஒரு
சிறு வாக்கியம் போல்
முன்பின்
போய் வந்தது.
தியானம்
போல்
அவர்
முடித்து
மெல்ல
கண் மூடியபோது
சொன்னேன்...
உங்கள்
இசை
இளமையாக
இருக்கிறது.
கண்
திறந்து
புன்னகைத்துச்
சொன்னார்...
முதுமை
இளமை
இசைக்குக்
கிடையாது.
பிரித்துப்பார்ப்பதெல்லாம்
நாம்தான்..!”
*ராஜா சந்திரசேகர்*
#ஆசிரியர் குறிப்பு#
ReplyDelete*கவிஞர் ராஜா சந்திரசேகர்*
பிடித்த வாசகம்:
"என்னவும் செய்.
செய்வதில் நீ இரு."
ராஜா சந்திரசேகர் எழுதிய
கவிதைத்தொகுப்புகள்:
1. கைக்குள் பிரபஞ்சம்
2. என்னோடு நான்
(2003ஆம் ஆண்டுக்கான
கவிப்பேரரசு வைரமுத்துவின்
கவிஞர்கள் திருநாள் விருது
பெற்றது)
3. ஒற்றைக்கனவும்
அதைவிடாத நானும்
(2002ஆம் ஆண்டுக்கான
திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
பெற்றது)
4. அனுபவ சித்தனின்
குறிப்புகள்
5. நினைவுகளின் நகரம்
6. மீனுக்கு நீரெல்லாம்
பாதைகள்
7. மைக்ரோ பதிவுகள்
மிக அருமை.
ReplyDeleteஅருமை.
ReplyDelete