*அப்பா*
“அப்பா...
உன்னுடைய
தோல் சுருங்கிய உருவம்
சதை
வற்றிய வடிவம்
ஆற்றல்
குறைந்த நீ.
ஓங்கிக்
கத்தாதே
சத்தமிடாமல்
உற்றுப் பார்க்க வேண்டிய
ஒன்றிருக்கிறது
அதன்
இப்போதைய
தோற்றத்தில்.
உன்னை
தாங்கி நின்ற தூண்
சற்றே
சாய்ந்து வருகிறது.
எவ்வளவு
சாய்கிறதோ
அவ்வளவுக்கு
உன்னையும்
சேர்த்து இழுத்துக் கொண்டு
சாய்ந்து
வருகிறது.
எவ்வளவுக்கு
சாய்கிறதோ
அவ்வளவுக்கு
உன்
குழந்தை
நிமிர்ந்து
வருகிறது
தவழ்தலில்
தொடங்கி.
மாயக்
கயிற்றின் விட்டம்
நிமிர
நிமிர
சாய
சாய..!”
*லட்சுமி மணிவண்ணன்*
கவிதை அருமை.
ReplyDeleteகவிதை மிகவும் அருமை.
ReplyDeleteமிக அருமை.
ReplyDelete