*பாதை*
“எப்படியோ வழிதவறி
யாருமற்ற
வீட்டுக்குள்
நுழைந்திருக்க வேண்டும்.
சன்னல்களில்
சுவர்களில்
மோதி
மோதித்
திரும்புகிற
ஒரு
மைனாவை
வீட்டிலிருந்து
வெகுதூரத்தில்
இருந்தபடி
தன் கை
பேசிக் காணொளியில்
காண்பவன்
செய்வதறியாது
திகைக்கிறான்.
ஒளிர்திரையை
இரு
விரல்களால்
பெரிதாக்கிப்
பெரிதாக்கி
அங்கலாய்க்கிறான்.
அது பயத்தில்
கண்ணாடி
சன்னலில்
ஆக்ரோஷமாக
மோதுகிறது.
ஜீம்
செய்கிறான்
இன்னும்
அதிவேகமாகத்
தொடுதிரையை
மோதுகிறது.
இன்னொரு
ஜீம்
அது
இவன் விழித்திரையில்
மோதுகிறது.
அடுத்த
ஜீமில்
அலகால்
இவனை இரண்டாகப் பிளந்து
வெளியேறிப்
பறக்கிறது..!”
*இரா.பூபாலன்*
(‘திரும்புதல் சாத்தியமற்ற பாதை’
தொகுப்பிலிருந்து - 2021)
கவிஞருக்கு பாராட்டுகள்.
ReplyDeleteமகிழ்ச்சி.
ReplyDeleteமிக அருமை.
ReplyDelete