எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday, 21 September 2016

படித்ததில் பிடித்தவை (π – Pi)


π – Pi

நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது எனது கணித ஆசிரியர் வட்டத்தின் சுற்றளவிற்கான சூத்திரம் கற்பித்தார், அப்போது
வட்டத்தின் சுற்றளவு = 2*Pi*R (or) Pi*D. எனக்கூறி Pi என்பதை 22/7 அல்லது 3.142 எனவும், D - விட்டம். R - ஆரம் எனவும் விளக்கமளித்து சந்தேகமிருந்தால் கேளுங்கள் என்றார்.

சக மாணவர் சிலர் அவர்களது சந்தேகத்தை கேட்டு விளக்கம் பெற்றனர். (விளக்கம் பெற்றதாக நம்பவைக்கப்பட்டனர்.)

நான் கேட்ட கேள்வியும் ஆசிரியரின் பதில்களும். உரையாடலாக கீழே...

நான்: இந்த Pi என்பது இங்கு எப்படி வந்தது? அதன் விளக்கம் என்ன? ஐயா.

ஆசிரியர்: அது தான் வட்டத்தின் சுற்றளவு சூத்திரம் என்று கூறினேனே

நான்: சதுரம் மற்றும் செவ்வகம் சுற்றளவு சூத்திரங்களில் இந்த Pi வரவில்லையே?

ஆசிரியர்: இப்போது நான் வட்டத்தின் சுற்றளவு பற்றிதானே பாடம் நடத்துகிறேன். நீ எதற்காக சதுரம் செவ்வகத்தை பற்றி இங்கே கேட்கின்றாய்?

நான்: ஐயா எனது சந்தேகம் சதுரத்தின் சுற்றளவிற்கு 4A எனவும், A என்பது பக்கத்தின் நீளம் என்று கூறினீர்கள். செவ்வக சுற்றளவிற்கு 2LB எனவும், L = நீளம் எனவும், B = அகலம் எனவும் கூறினீர்கள். அது போல Pi என்பது என்ன சற்று தெளிவாக கூறுங்களேன்?

ஆசிரியர்: அதுவா, π (Pi) is a constant value.

இருப்பினும் நான் கேட்ட 22/7 என்பது எப்படி வந்தது என அவரால் விளக்கமளிக்க முடியவில்லை. எனக்கும் விளங்கவில்லை. இதனால் ஏற்பட்ட வாக்கு வாதத்தினால் இரு தினங்கள் வகுப்பிலிருந்து விலக்கி வைக்கப்பட்டு, இது போன்ற கேள்விகளை இனி கேட்க மாட்டேன் என்ற உத்தர வாதம் தந்து உள்சென்றேன்.

இச்சம்பவத்தை மறந்து சிலநாள் கடந்த பின்பு எதேட்சயாக இதன் விளக்கம் கிடைத்தது.

எனது தாத்தா எங்கள் ஊரின் மிகச்சிறந்த தச்சர் எனும் பெயர் பெற்றவர். எங்கள் ஊர் கோயிலின் தேர் சக்கரங்கள் பழுதுபட்ட காரணத்தினால் அச்சக்கரங்களை மாற்றும் பணி எனது தாத்தாவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவருக்கு எழுத படிக்க தெரியாத காரணத்தினால் தேவையான சாமான்களை பட்டியலிடும் பணி என்னிடம் வழங்கப்பட்டது. (உண்மையில் தினிக்கப்பட்டது). தாத்தா ஒவ்வொன்றாக கூற நான் எழுத வேண்டும்.
அப்படி அவர் கூறி வரும் போது வந்த ஒரு வாக்கியம் என்னை நெருடியது.

அவ்வாக்கியம்,
ஐந்தடி உயர சக்கரத்திற்கு, 15அடி 9 அங்குல நீள இரும்பு பட்டை, (இரும்பு பட்டை என்பது மரக்கட்டை தேயாமல் இருக்க சக்கரத்தில் ஒட்டப்படும் இரும்பு). 7 அடி உயர சக்கரத்திற்கு, 22 அடி நீள இரும்பு பட்டை.
இதில் வந்த 7 அடிக்கு 22 அடி என்பது எங்கோ கேட்டதாக நினைவுக்கு வர, என் தாத்தாவிடம் எப்படி 7 அடி உயர சக்கரத்திற்கு 22 அடி என கணக்கிட்டீர்கள் என்று வினவினேன்.

பழைய சக்கரங்கள் இருந்த இடத்திற்கு அழைத்து சென்று ஏழடி உயர சக்கரத்தின் ஒரு இடத்தில் குறியிட்டு அக்குறிக்கு நேராக மண்ணிலும் குறித்துக்கொண்டு, சக்கரத்தை ஒரு முழு சுற்று வரும் வரை தள்ளிக்கொண்டு வந்து மீண்டும் சக்கரத்தில் குறியிட்ட பகுதி மண்ணை தொட்ட இடத்தில் குறியிட்டார். மண்ணில் முதலில் குறியிட்ட இடத்திற்கும் இரண்டாம் இடத்திற்குமான தொலைவை அளந்தால் சரியாக 22 அடி வந்தது.

அதாவது சக்கரத்தின் விட்டம் 7 அடியாக இருந்தால் அதன் சுற்றளவு 22 அடி. சக்கரத்தின் விட்டம் 1 அடியாக இருந்தால் அதன் சுற்றளவு 3 அடி 1.7 அங்குலம் (3.142) என விளக்கினார்.

(நன்றி: மணிவண்ணன், முகநூல் தகவல்)

**** **** ****

39 comments:

  1. அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. Pi explanation very super.

    ReplyDelete
  3. செல்லதுரை15 December 2024 at 17:47

    👌👌👌

    ReplyDelete
  4. நரசிம்மன் R.K15 December 2024 at 17:47

    👍👍

    ReplyDelete
  5. ஸ்ரீராம்15 December 2024 at 17:48

    👌👌👌

    ReplyDelete
  6. K. பாலாஜி15 December 2024 at 17:49

    👍

    ReplyDelete
  7. செந்தில்குமார். J15 December 2024 at 17:49

    👍

    ReplyDelete
  8. ராஜாராமன்15 December 2024 at 17:51

    அன்புள்ள ஐயா,

    சிறப்பாக எழுதப்பட்டுள்ளது மற்றும் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பகிர்ந்தமைக்கு நன்றி!

    வாழ்த்துகள்💐🙏

    ReplyDelete
  9. குலசேகரன்15 December 2024 at 18:35

    அற்புதம் - ராஜு

    ReplyDelete
  10. சீனிவாசன்15 December 2024 at 18:36

    🙏🙏🙏

    ReplyDelete
  11. Great one, sir.

    ReplyDelete
  12. ஆறுமுகம்15 December 2024 at 18:38

    அருமை Sir.

    ReplyDelete
  13. சிறப்பு

    ReplyDelete
  14. வில்லவன் கோதை15 December 2024 at 21:44

    👍
    கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய ஒன்று.

    ReplyDelete
  15. அம்மையப்பன்15 December 2024 at 21:55

    👍

    ReplyDelete
  16. அருள்ராஜ்15 December 2024 at 21:57

    👍

    ReplyDelete
  17. பாலசுப்ரமணியன்16 December 2024 at 05:46

    Super sir 👍

    ReplyDelete
  18. சதீஷ், விழுப்புரம்.16 December 2024 at 08:16

    🙏

    ReplyDelete
  19. சுகுமார்16 December 2024 at 08:53

    தகவலுக்கு நன்றி.
    👏

    ReplyDelete
  20. கார்த்தி16 December 2024 at 09:39

    👌🏻😊
    அருமை.

    ReplyDelete
  21. சுதந்திரா16 December 2024 at 10:37

    👌

    ReplyDelete
  22. Super explanation for pi sir.
    👏👏👏

    ReplyDelete
  23. Very nice superb
    explanation.
    💐🌹💐👌

    ReplyDelete
  24. Thanks sir.
    🙏

    ReplyDelete
  25. Ramamoorthi, Pondy.16 December 2024 at 23:36

    Explanation is Superb Anna.

    ReplyDelete
  26. முருகன்16 December 2024 at 23:37

    அருமையான விளக்கம்.
    👌👍

    ReplyDelete
  27. Thanks for sharing Sir.

    ReplyDelete
  28. முருகேசன்17 December 2024 at 07:44

    அருமையான விளக்கம்.
    👌👍

    ReplyDelete
  29. வெங்கட்ராமன், ஆம்பூர்.17 December 2024 at 20:12

    மிக அருமை.
    👌👌💐💐🙏🏻🙏🏻

    ReplyDelete
  30. அருமையான விளக்கம்.
    👌🏽👌🏽
    இது மிகவும் பயனுள்ளதாக
    இருந்தது,
    நன்றி.

    ReplyDelete
  31. இந்திரா20 December 2024 at 06:52

    👌👌👌

    ReplyDelete