“அந்த இளைஞன்
மாநகரத்துக்கு புதியவன்
போல.
மாநகரப் பேருந்தில்
நடத்துனரிடம் பயணச்சீட்டு
பெற்றவன்
தான் இறங்கும் இடத்தை
சொல்ல சொன்னான்
நடத்துனரிடம்.
கைப்பேசியை எடுத்தவன்
மெய்மறந்துப் போனான்.
அக்கம்பக்கம்
பார்க்கவில்லை.
மூன்று இறக்கங்கள்
முன்பே இறங்கிய
எனக்குத்தான் பயணம்
முடிந்தும்
பதைபதைத்துப் போனது
நடத்துனர் அவனை
சரியாக இறக்கி விட்டாரா
என்று..?”
Same happened for me...
ReplyDelete