எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday, 7 December 2014

ஒரு குழந்தையின் இன்னிசை...


“ரயில் பயணத்தில்...
டுவிங்...டுவிங்...டுவிங்...
என தொடர்ந்து வந்த
சத்தம் எல்லோரையும்
எரிச்சல் பட வைத்தது.

சத்தம் வந்த பக்கம்...
அம்மாவின் அருகில்
உட்கார்ந்து இருக்கும்
பெண் குழந்தை
அலைப்பேசியில்
வீடியோ கேம்
விளையாடிக்கொண்டிருந்தது
டுவிங்...டுவிங்...டுவிங்...
இன்னிசையுடன்...


இப்போது எரிச்சல் நீங்கி
ரசிக்க தொடங்கினேன்.
குழந்தை அருகே சென்ற
நான் அது விளையாடிய
அழகும், நேர்த்தியும்
நானும் மனதிற்குள்ளேயே
அக்குழந்தையோடு சேர்ந்தே
விளையாடத்தொடங்கி விட்டேன்
டுவிங்...டுவிங்...டுவிங்...
பின்னணி இசையுடன்.

அடுத்த ஸ்டேஷனில்
அந்த குழந்தை
அம்மாவோடு
இறங்கியப்பின்னும்
அந்த பெட்டி முழுவதும்
அந்த டுவிங்...டுவிங்...டுவிங்...
இசை கேட்டுக்கொண்டேயிருந்தது.

சென்ட்ரல் ஸ்டேஷனில்
நான் இறங்கியப்போது...
என்னுடன் இறங்கிய முதியவர்
எதோ ஒரு ராகத்தில்
டுவிங்...டுவிங்...டுவிங்...என 
பாடிக்கொண்டே இறங்கினார்..!”

                                                           -   K. அற்புதராஜு.

No comments:

Post a Comment