தொலைந்த வெளிச்சம்
“கார்த்திகை ராத்திரி.
ஏற்றின கடைசி விளக்கை
வைத்துத் திரும்புமுன்
அணைந்து விடுகிறது
முதல் விளக்குகளுள் ஒன்று.
எரிகிறபோது பார்க்காமல்
எப்போதுமே
அணைந்த பிறகுதான்
அதைச் சற்று
அதிகம் பார்க்கிறோம்.
எரிந்த பொழுதில்
இருந்த வெளிச்சத்தை விட
அணைந்த பொழுதில்
தொலைந்த வெளிச்சம்
பரவுகிறது
மனதில் பிரகாசமாக..!”
- கல்யாண்ஜி.
No comments:
Post a Comment