*அவள் நைட்டி அணிந்ததில்லை...*
“ஷேம் ஷேம் பப்பி ஷேம்” என்று
சின்ன
வயதில் ஓடியவள்....
எட்டு
வயதில்
முழங்காலுக்கு
மேலான காயத்தை
அப்பாவுக்கு
காட்ட மறுத்தவள்...
உடை
மாற்றும் அறைக்குள்
அம்மாவைக்
கூட அனுமதியாதவள்...
எக்ஸ்ரே
அறையிலிருந்து ஓடிவந்தவள்...
அருவிகளில்
ஒருபொழுதும் குளிக்காதவள்...
வெளிச்சத்தில்
கணவனுடன் கூட சம்மதியாதவள்...
மரித்தலுக்கு
பின்
அம்மணமாய்க்
கிடக்கிறாள் மார்ச்சுவரியில்..!
ஈக்களும், கண்களும் “அங்கேயே” மொய்க்க
இப்படியாகுமெனில்
அன்புலட்சுமி
தற்கொலையே
செய்திருக்க
மாட்டாள்..!
*சாம்ராஜ்*
"என்றுதானே சொன்னார்கள்" கவிதை நூல்.
#ஆசிரியர் குறிப்பு#
ReplyDelete*சாம்ராஜ்*
சாம்ராஜ் தமிழில் கவிதைகள்
கட்டுரைகள், சிறுகதைகள் மற்றும்
சினிமா விமர்சனங்கள் எழுதிவரும்
எழுத்தாளர். சென்னையில்
வசிக்கிறார். திரைத்துறையில்
உதவி இயக்குநராக பணியாற்றி
வருகிறார். அங்கதமும் பகடியும்
கொண்ட கதைகளையும்
கவிதைகளையும் எழுதுபவர்.
சாம்ராஜ் மதுரையில்
சோ. ரத்தினம், பங்கஜவள்ளி
இணையருக்கு மகனாகப்
பிறந்தார். ராமகிருஷ்ணா மிஷன்
மேல்நிலைப்பள்ளி (வடக்கு)
சென்னை, மதுரை, தியாகராசர்
நன்முறை மேல்நிலைப்பள்ளி,
செளராஷ்டிரா மேல்நிலைப்
பள்ளிகளில் பள்ளிப்படிப்பை
முடித்தார். சாம்ராஜ் இடதுசாரி
இயக்கங்களுடன்
தொடர்புகொண்டு
செயலாற்றியிருக்கிறார்.
ஜூலை 23, 2014 அன்று
சரோஜாவை மணமுடித்தார்.
மகன் ஆரண்யா, மகள் டெசா.
இவரது முதல் படைப்பான
’Saving Private Ryan-னும் இரண்டாம்
உலகப் போரும்’ என்னும் சினிமா
விமர்சனம் 1999-ஆம் ஆண்டில்
மக்கள் தளத்தில் வெளியானது.
’என்றுதானே சொன்னார்கள்’
என்னும் கவிதைத் தொகுப்பு
பரவலாக பேசப்பட்டது. இவரது
முதல் சிறுகதைத் தொகுப்பு
பட்டாளத்து வீடு. இத்தொகுப்பின்
பத்து கதைகளுமே வாழ்வில்
பெரும் இழப்பை சந்தித்தவர்கள்
அல்லது வாழ்வையே
தொலைத்தவர்கள் பற்றியது
எனலாம். முற்றிலும் வெவ்வேறு
ஊர்களை சேர்ந்த வெவ்வேறு
மனிதர்களை பற்றிய கதைகள்
என்றாலும் இந்த எல்லா
கதைகளையும் இணைக்கிற ஒரு
புள்ளியாக இழப்பு இருக்கிறது.
இழப்பைப்பற்றி மட்டுமல்ல,
இழப்புக்கு பின்னால்,
துயரங்களுக்கு அப்பால் தொடரும்
வாழ்வை குறித்தும் பேசுகின்றன
சாம்ராஜின் கதைகள்.
தனது இலக்கிய ஆக்கத்தில்
செல்வாக்கு செலுத்திய
முன்னோடிகளென - தல்ஸ்தோய்,
தாஸ்தோயெவ்ஸ்கி, ஆண்டன்
செக்காவ், கார்க்கி,
புதுமைப்பித்தன், ப.சிங்காரம்,
அசோகமித்திரன், அ.முத்துலிங்கம்,
ஜெயமோகன், நாஞ்சில் நாடன்
ஆகியோரை குறிப்பிடுகிறார்.
இயக்குநர் ராமிடம் தங்கமீன்கள்
மற்றும் பேரன்பு
திரைப்படங்களிலும், மலையாள
திரைப்படம் ஒழிமுறியிலும்
பணியாற்றியிருக்கிறார்.
மலையாளத்திலிருந்து தமிழுக்கு
மொழிபெயர்க்கப்பட்டுள்ள
"திருடன் மணியன் பிள்ளை"
நூலை திரைப்படமாக்கும்
முயற்சியில் இருக்கிறார்.
தற்போது இயக்குநர்
மிஷ்கினுடன் பணியாற்றுகிறார்.
2015-ல் வெளியான ஒண்டிப்புலி
என்னும் கவிதை விடுதலைப்
புலிகளின் தலைவரை குறிக்கிறது
என எண்ணிய தமிழ்த்தேசியர்
சிலரால் கடுமையாக
கண்டிக்கப்பட்டார்.
*சிறுகதை தொகுப்பு*
பட்டாளத்து வீடு
(2015, சந்தியா பதிப்பகம்)
ஜார் ஒழிக
(2018, நற்றிணை பதிப்பகம்)
*கவிதை தொகுப்பு*
என்று தானே சொன்னார்கள்
(2013, சந்தியா பதிப்பகம்)
*கட்டுரைத் தொகுப்பு*
நிலைக்கண்ணாடியுடன் பேசுபவன்
(2016, நற்றிணை பதிப்பகம்)
மூவந்தியில் சூழும் மர்மம்
(2022, சந்தியா பதிப்பகம்)
😢
ReplyDelete👍
ReplyDeleteஉணர்வுபூர்வமான கவிதை
ReplyDelete😢
ReplyDeleteமனதை வலிக்கத்தான் செய்கிறது.
ReplyDelete👍
ReplyDelete😥
ReplyDeleteVERY NICE SENTIMENT. BEST WISHES.
ReplyDelete👏👏👏👏
ReplyDelete👍🌷
ReplyDelete