“எனக்கும் அவரை
நன்றாகத்
தெரியும்.
அவருக்கும்
என்னை
நன்றாகத்
தெரியும்.
அவர்
என்னை
பார்க்காத
போது
நான்
அவரைப்பார்த்தேன்.
அவரும்
நான்
பார்க்காத
போது
என்னைப்
பார்த்திருப்பார்.
நான் அவரை
பார்க்க முயற்சிக்கும்போதெல்லாம்...
அவர்
என் கண்களை சந்திக்கவில்லை.
அவருக்கும்
எனது கண்கள்
சிக்கவில்லையோ...
என்னவோ...
அன்றைய தினம்... ஏனோ...
ஒருங்கிணையவேயில்லை
இருவரின்
பார்வையும்..!
அந்த
ரயில் பிரயாணத்தில்
இறுதி
வரை சந்திக்காமலே
இறங்கி
விட்டோம்..!”
*கி.அற்புதராஜு*
(16.03.2023)
Arumai Sir! ❤️
ReplyDeleteஅருமை
ReplyDeleteஅருமை
ReplyDeleteஅருமை.
ReplyDelete👌👌💐💐🙏🏻🙏🏻
ReplyDelete👌
ReplyDelete👌
ReplyDelete👍👍
ReplyDelete👍
ReplyDeleteசில சமயங்களில்
ReplyDeleteசிலரது பார்வையை
தவிர்க்கவும்
வேண்டியிருக்கிறது...
அருமையான கவிதை..!