எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday, 31 March 2023

*சிவப்புப் பூக்கள்*

 


நான்

கடையில் வாங்கிய

எறும்பு மருந்தால்

ஓராயிரம்

எறும்பையாவது

கொன்ற பின்தான்

உயிர் பிழைத்தது

வீட்டுத் தோட்டத்திலிருந்த

அந்த ஒற்றை

செம்பருத்திச் செடி..!

 

இப்போதெல்லாம்

நிறைய பூக்களை

பூத்து என்னை

மகிழ்வித்தாலும்...

 

பூக்களின் அதீத சிவப்பு

எனது பாவச் செயலை

நினைவுறுத்தி

வருந்த வைக்கிறது..!

 

*கி.அற்புதராஜு*

(31.03.2023)

9 comments:

  1. ஸ்ரீராம்4 April 2023 at 13:51

    ஒன்றின் அழிவில்
    இன்னொன்று வளர்ச்சி.
    இயற்கை நியதி

    ReplyDelete
  2. சிவய்யன்4 April 2023 at 13:52

    👌

    ReplyDelete
  3. கலைச்செல்வி4 April 2023 at 14:20

    👏🏻

    ReplyDelete
  4. Roja sivappu
    reminds
    sivappu erumbu.

    ReplyDelete
  5. அருமை. கருணை

    ReplyDelete
  6. 👌
    Have a great day.

    ReplyDelete
  7. Narasimhan R.K5 April 2023 at 06:13

    👍👍

    ReplyDelete