வேம்பாழ்வார்...!
‘வேம்பு
எங்களுடையது’ என்று
காப்புரிமைச் சட்டத்தைக் காட்டி வெளிநாட்டினர் சொந்தம் கொண்டாடிய நேரம் அது.
வேம்பு என்பது இந்திய மண்ணுக்குச் சொந்தமானது என்பதை நிரூபிக்க, 2000-ம் ஆண்டு, மே
மாதம் 9,10
தேதிகளில் ஜெர்மனி நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்த இந்தியக் குழு ஒன்று
சென்றது. அதில் நம்மாழ்வாரும் இடம்பெற்றார். வெற்றிகரமாக காப்புரிமையை மீட்டுவந்த
பிறகு, வெற்றி
விழாக் கூட்டம் செங்கல்பட்டில் உள்ள
திருமண மண்டபத்தில் எளிய முறையில் நடந்தது.
“கோர்ட்டுக்கு
வெளியே பல நாட்டுக்காரனும் நின்னுக்கிட்டு இருக்கான். நான் வேப்பங்குச்சியை
எடுத்து வாயில் வெச்சு நல்லா கடிச்சேன். ஒருத்தன், ‘என்ன
பண்ணிக்கிட்டு இருக்கே?’னு
கேட்டான். ‘பிரஷ்
பண்றேன்’னேன். ‘எது பிரஷ்?’னு கேட்டான். வாயில மென்னுக்கிட்டிருந்த
வேப்பங்குச்சியைக் காட்டினேன். ‘பேஸ்ட்
எங்கே?’னு
கேட்டான். ‘குச்சிக்குள்ளயே
இருக்குற கசப்புச் சாறுதான் பேஸ்ட்’னு சொன்னேன். கடைசியா, என்னோட
பிரஷை தூக்கிப் போட்டா,
நுண்ணுயிரிங்க தின்னுட்டு மண்ணை வளமாக்கும், உன்னோட
பிளாஸ்டிக் பிரஷை தூக்கிப் போட்டா, மண்ணுல இருக்கிற நுண்ணுயிரிகளைக் கொல்லும்’னு
சொன்னேன் எல்லாரும் பேய் அறைஞ்ச மாதிரி ஆயிட்டாங்க. கோர்ட்டுக்குள்ள, ‘எங்க ஊர் விவசாயிங்க வேப்பந்தழையையும், மாட்டுக்
கோமியத்தையும் கலந்து,
பூச்சி விரட்டியா தெளிக்கிறான். உங்களுக்கு, ‘மேரி மாதா’ மாதிரி எங்களுக்கு, ‘மாரியாத்தா பொம்பளை’ தெய்வம்.
அவளுக்கு வேப்ப இலையிலதான் மாலை போடுவோம்’னு சொல்லி சங்கப்பாடல் தொடங்கி, கூழ்
வார்க்கும்போது பாடும் கும்மிப்பாட்டு வரை எல்லாத்தையும் பாடிக்காட்டினேன்!’ என்று
அப்படியே மேடையில் நடித்தும் காட்டினார்” நம்மாழ்வார். இந்த நிகழ்வில்தான் ‘வேம்பாழ்வார்’ என்ற பட்டம் நம்மாழ்வாருக்கு சூட்டப்பட்டது.
-
நம்மாழ்வார்.
(“நான் நம்மாழ்வார் பேசுகிறேன்...”
- புத்தகத்திலிருந்து)
(நன்றி: பசுமை விகடன்)
No comments:
Post a Comment