எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 4 January 2018

முதல் பூ


புத்தாண்டுக்கு
குடும்பத்தோடு
பெருமாள் கோவில்
சென்றிருத்தேன்.

வெளிப்பிரகாரத்தில்
தொடங்கிய
சற்றே நீளமான வரிசை
நாங்கள் நின்றதும்
நீளமான வரிசையானது.

வழி நெடுக
ஓரத்தில்
பூச்செடிகள்
நடப்பட்டிருந்தன.

அதில்
செம்பருத்தி பூச்செடி
மிகவும் அழகான
முதல் பூவை
பூத்திருந்தது
பச்சை நிற வலைக்குள்.

வரிசையில் நின்ற
சிறுமிகள் சிலர்
அப்பூவை பறிக்க
முயற்சித்தப் போது
பெரியவர்களை
அதட்ட வைத்தும்...

பூச்செடிக்கு அருகே
குழந்தைகளை
நிற்க விடாமல்
வரிசையை
வேகமாக நகர செய்தும்...

அழகான அந்தப் பூவின்
ஆயுளை நாள் முழுதும்
நீட்டிக்க செய்கிறார்
நிறைய பூக்களால்
அலங்கரிக்கப்பட்ட

சுந்தரராஜப் பெருமாள்..!

      -      கி. அற்புதராஜு.

17 comments:

  1. அருமை... அருமை...

    ReplyDelete
  2. கவிதா ராணி1 January 2021 at 20:33

    முதல் பூவின்
    ஆயுளை நாள் முழுதும்
    நீட்டிக்க முயற்சிக்கிறார்...

    நிறைய பூக்களால்
    அலங்கரிக்கப்பட்ட சுந்தரராஜப் பெருமாள்..!

    Finishing touch Super.

    ReplyDelete
  3. பூங்குழலி3 January 2021 at 09:33

    சற்றே நீளமான வரிசை...
    நாங்கள் நின்றதும்
    நீளமான வரிசையானது...

    Sujatha touch...

    ReplyDelete
  4. வெங்கட்ராமன், ஆம்பூர்.1 January 2022 at 12:10

    கவிதை மிக அருமை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. ஸ்ரீகாந்தன்1 January 2022 at 12:13

    மிகவும் அருமை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. ஜெயராமன்1 January 2022 at 12:39

    மிக நன்று.

    ReplyDelete
  7. எல்லாமே பெருமாள் கையில்

    ReplyDelete
  8. கெங்கையா1 January 2022 at 14:40

    முதல் பூ கவிதை
    மிக அருமை.
    கவிஞருக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  9. கவிதை நன்று.
    பாராட்டுகள்.

    ReplyDelete
  10. நந்தகுமார்1 January 2022 at 16:36

    எல்லாவிதமான
    செயல்களிலும் இறைவன்.
    அருமை.

    ReplyDelete
  11. மீள்பதிவானாலும் கவிதை வரிகளின் ஈர்ப்பு. சுவாரஸ்யம் அண்ணா

    ReplyDelete
  12. ஸ்ரீராம்2 January 2022 at 11:31

    மிக அருமை.

    ReplyDelete
  13. கமல நாதன்2 January 2022 at 23:49

    பறிக்கப்பட்ட பூக்களைச்
    சுமந்து நிற்கும் பெருமாள்
    பூப் பறிப்பதைத் தடுக்கின்றார்...

    வித்தியாசமான பார்வை

    அருமை

    ReplyDelete