"புதிய வீட்டில்
எனக்கான உடைகளுக்கு
படுக்கை அறையிலிருந்த
பீரோவில் சிறிய இடம்
ஒதுக்கினாள் மனைவி.
பெரிய இடங்களை
பிடித்துக் கொண்டன
மனைவியின்
புடவைகள்.
ஐந்து வருடங்களில்
எனது ஆடைகள்
துரத்தப்பட்டன
பீரோவிலிருந்து
சுவரிலிருந்த அலமாரியின்
சற்றே பெரிய
பகுதிக்குள்.
இரண்டு வருடங்களுக்குள்
அலமாரிக்கும்
படையெடுத்தது
புடவைகள்.
அலமாரியின்
பெரிய பகுதியிலிருந்து
சிறய இடத்துக்கு
மீண்டும் துரத்தப்பட்டன
எனது ஆடைகள்.
மாடியில் புதிதாக
ஒரு அறை கட்டப்பட்டவுடன்
எனது ஆடைகள்
மாடியேறின.
இந்த வருடப் பொங்கலுக்கு
வீட்டை சுத்தம்
செய்த பின்
மாடியேறிவிட்டன
மனைவியின் புடவைகளும்.
எனது ஆடைகளுக்காக
மனைவி தேர்வு செய்த
புதிய இடத்தைப்
பார்க்கவும்
எனது ஆடைகளுக்கு
ஆறுதல் சொல்லவும்
மாடி ஏறிக்கொண்டிருக்கிறேன்
நான்..!"
- கி. அற்புதராஜு.
அருமை
ReplyDelete😅👌🏻
ReplyDeleteDedicated to pinni.
Good.
ReplyDeleteஅருமை
ReplyDelete😀😀
ReplyDeleteகவிதை மிக அருமை.
ReplyDeleteபுதிய இடம் கிடைத்ததும்
தெரிவிக்கவும்.
👌👏👏
ReplyDelete😄😄
ReplyDeleteகவிஞரின் அங்கலாய்ப்பு
ReplyDeleteமிக அருமை.
😂😂😂
ReplyDelete🙂
ReplyDelete😃😃💐💐🙏🏻🙏🏻
ReplyDelete😀👏
ReplyDelete🙏
ReplyDeleteஒவ்வொரு கணவனின் தேடுதல்
ReplyDelete