எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 12 October 2016

மாப்பிள்ளை அழைப்பும்... 1000 வாலா வெடியும்..!


“நகரத்தின்
தேர் ஓடும் வீதியில்
பெரிய மண்டபத்தில்தான்
திருமணம்...

முந்தைய நாள் இரவில்
மாப்பிள்ளை அழைப்பில்
பெண்ணையும் சேர்த்தே
அழைத்தார்கள்
இரண்டு குதிரை பூட்டிய
சாரட் வண்டியில்...

1௦௦௦ வாலா தரையிலும்,
1௦௦ ஷாட்ஸ் வானிலும்
வெடித்து சிலருக்கு
வேடிக்கையும்,
பலருக்கு பயத்தையும்
காட்டின...

கேரளா செண்டை மேளம்,
பேண்ட் கிளாரிநெட் என
காதுகளை துளைத்தன
பெரும் சத்தம்.
அந்த சத்தத்தில்
கரைந்துப்போயின
நம் பாரம்பரிய
மேளமும், நாதஸ்வரமும்...

இசைக்கு ஏற்ப ஆடும்
குதிரையும்,
அலங்கரிக்கப்பட்ட
யானையும்
பங்கேற்றன ஊர்வலத்தில்...

பிள்ளையார் கோவிலில்
தொடங்கி
மெதுவாக மண்டபத்தை
நெருங்கிய ஊர்வலம்
போக்குவரத்து நெரிசலை
உண்டாக்கியது பாதை நெடுக

வாகனங்களின் ஒலியும்,
ஊர்வலத்தின் ஒலியும்
மோதிக்கொண்டன...

வாழ்த்த வந்த எங்களின்
வாழ்த்துகளை எல்லாம்
அடித்து, துவைத்து,
வெளுத்து, கிழித்து
துவம்சம் பண்ணியது
நெரிசலில் சிக்கி
பாதிக்கப்பட்டவர்களின்
கோபப்பார்வையும்,
செயல்களும்..!”
         
        -    கி. அற்புதராஜு.

3 comments:

  1. திருமணத்தில் ஆடம்பரம் தேவையில்லை... மற்றவர்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள் இருந்தால் போதும்...

    ReplyDelete