எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday, 15 June 2016

யாருக்கும் தெரியாமல்...


“அதிகாலை நேரம்.
நகரத்தின் ஞாயிறு
உறங்கிக்கொண்டிருந்தது.
தெருவை
சுற்றும் முற்றும்
பார்த்தேன்.
யாருமில்லை.
ஒரு வாரமாக
பூட்டியிருந்த
வீட்டின்
மதில்சுவர்
ஏறிக்குதித்தேன்.
தண்ணீர் குழாயைத்
திறந்தேன்.
தண்ணீர் வந்தது.
வாடியிருந்த
தொட்டிச்செடிகளுக்கு
தண்ணீர் விட்டப்பின்
பக்கத்து வீட்டிலிருந்து
யாருக்கும் தெரியாமல்
மதில்சுவர்
ஏறிக்குதித்து
திரும்பியதை
செடியில் பூத்திருந்த
ஒற்றை ரோஜாப்பூ மட்டும்
தலையாட்டியப்படியே
சந்தோசமாக
பார்த்துக்கொண்டிருந்தது..!”

-   கி. அற்புதராஜு.

4 comments:

  1. வாடிய பயிரைக் கண்ட போது வாடி நீர் வார்த்தது மட்டும் அல்ல, அந்த ரோஜாவை பறிக்காமல் வந்ததும் நன்றே. ரோஜாவின் சந்தோஷம் இரண்டுக்கும் தானே.

    ReplyDelete
  2. உங்கள் விமர்சனமே கவிதை போல் உள்ளது. அப்பப்பா...வாசகனின் பார்வை எவ்வளவு விசாலம்..!

    ReplyDelete
  3. அற்புதம்... இது போன்ற சிந்தனைகள் அற்புதராஜூ அவர்களால் மட்டுமே படைக்க முடியும்.

    ReplyDelete