எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 10 June 2016

படித்ததில் பிடித்தவை (நதி - கலாப்ரியா கவிதை)


நதி
“கரையில் நிற்பவரைக்
கால்களை மட்டும்
தன்னில் இறங்குபவர்களைத்
தலை வரையிலும்
மூழ்கிக்
குளிப்பவர்களை
மூளையுள்ளும்
நனைக்கும்
தண்ணீர் நதி.

மின்
தொடர்வண்டியிலோ
பார்வைத் திறன்
குறைந்தவரின்
பாடல் கையேந்தி
நெருங்கும்போது
கண்
பொத்திக்கொள்வோரின்
காதுகளையும்
நனைக்கும்
காற்று நதி.

-  கலாப்ரியா (தூண்டில் மிதவையின் குற்ற உணர்ச்சி)

No comments:

Post a Comment