எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 9 December 2015

செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசாமி


“அலுவலகம் முடிந்து
வீடு திரும்பியதும்
நான் மனைவியிடம்
கூறும் அன்றைய
நிகழ்வுகளையும்...

மகன் கல்லூரி முடிந்து
வீட்டுக்கு வந்து
சமையல் அறையில்
அம்மாவிடம் கூறும்
அத்தனை விஷயங்களையும்...

வீட்டுத்துணி துவைக்க
வரும் பவானி,
பாத்திரம் துலக்க
வரும் சாய்னா,
எதிர் வீட்டு சத்தியா
என ஒவ்வொருவர்
கூறும் செய்திகளையும்...

கொஞ்சம் கூட்டி, குறைத்து,
செம்மையாக்கி,
மெருகேற்றி, அழகாக்கி...

அன்று இரவோ
அடுத்த நாளோ
அம்மா வீட்டுக்கோ
அக்கா வீட்டுக்கோ
கைப்பேசியில்
பேசும் போது
செய்திகளாக
வாசித்து விடுகிறார்
எங்க வீட்டு
சரோஜ் நாராயணசாமி..!

-   K. அற்புதராஜு.

15 comments:

  1. அருமை

    ReplyDelete
  2. ஹரிகுமார்29 May 2022 at 07:33

    😀

    ReplyDelete
  3. சத்தியன்29 May 2022 at 07:34

    👌🏻🤝🙏

    ReplyDelete
  4. வெங்கட்ராமன், ஆம்பூர்29 May 2022 at 07:51

    👌👌💐💐🙏🏻🙏🏻

    ReplyDelete
  5. All ladies are like that 😊

    ReplyDelete
  6. சிவய்யன்29 May 2022 at 09:17

    😁👌

    ReplyDelete
  7. கலைச்செல்வி29 May 2022 at 11:59

    😃👌

    ReplyDelete
  8. 😄😄😄

    ReplyDelete
  9. கெங்கையா29 May 2022 at 12:53

    அந்தக்கால நினைவுகள்...
    கவிதை அருமை.

    ReplyDelete
  10. சீனிவாசன்29 May 2022 at 14:17

    👌👌👌😊

    ReplyDelete
  11. 😃😃 super

    ReplyDelete
  12. மோகன்தாஸ் S29 May 2022 at 16:40

    😀😀😀😀👌🏻👌🏻👌🏻👍

    ReplyDelete
  13. 👌🏻👌🏻

    ReplyDelete