எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 19 December 2015

படித்ததில் பிடித்தவை (சார் ஒரு கொஸ்டின்-1 – யுகபாரதி கவிதை)


சார் ஒரு கொஸ்டின்...
‘சோற்றைக் குறைத்தால்
சுகர் வராது
சோம்பலைத் தவிர்த்தால்
சுபிட்சம் வந்துவிடும்
எச்சரிக்கையோடிருந்தால்
எண்பது வரை சுகவாழ்வு
பார்த்து நடந்தால்
விரிவடையும் பாதைகள்
படிப்பைத் தொடர்ந்தால்
பஞ்சத்தை வெல்லலாம்
வளைந்துக் கொடுத்தால்
வாழ்வது சிரமமில்லை
இறங்கிப் போ
எல்லாமே எளிதுதான்...’ என
பிரசங்கம் செய்தவரிடம்
பிரியத்தோடு கேட்டேன்...

‘அசைவத்தை நிறுத்தினால்
ஆக முடியுமா
அய்யராக..?’

-   யுகபாரதி.

No comments:

Post a Comment