“யானை வெடியா..?
லட்சுமி வெடியா..?
தெரியவில்லை...
இருட்டில்
நெருப்புடன் திரி
புகைந்துக்கொண்டிருந்தது...
வாகனத்தில் சென்ற
எல்லோரையும்
நடு வீதியில்
நிறுத்தி விட்டனர்
வெடி வைத்த
சிறுவனும், சிறுமியும்.
சில நிமிடங்கள்
எல்லோர் பார்வையும்
வெடியின் மீதே...
வெடி சத்தத்தை
எதிர் நோக்கி காத்திருந்த
அனைவரையும்
ஏமாற்றியது
வெடிக்காமல் புஸ்ஸ்....
என்ற வெடி.
காத்திருந்த வாகன ஓட்டிகள்
அப்பாடா என்று
சந்தோஷத்துடன்
பயணத்தை தொடர்ந்தனர்...
சிறுவனும், சிறுமியும்
வெடிக்கவில்லையே என்று
வருத்தத்துடன் வீட்டிற்குள்
சென்றனர்..!”
- கவிதையாக்கம்: K. அற்புதராஜு.
(எண்ணம்: K.S. ரமேஷ்.)
Sir...excellent...kudos to ramesh also....nice time to post...
ReplyDeleteThank you Sir...
ReplyDelete