எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday, 30 January 2015

படித்ததில் பிடித்தவை (ட்விட்டுகள்)


1.     “காதுக்குள்ள பூச்சி ஒண்ணு போயிருச்சு.
எவ்ளோ ட்ரை பண்ணியும் வெளியே வரலை.
அதான், ஹெட்செட் மாட்டி DSP ஹிட்ஸ்
ஓட விட்டிருக்கேன்..# சாவட்டும்!” 
(twitter.com/RaVuSu) 
[DSP – Devi Sri Prasad, Music Director]



2.     “அமெரிக்காவில், காந்தி பெயரில் பீர்
என்றவுடன் பொங்கியெழுந்த இந்தியா,
பிரான்ஸின் மாவீரன் நெப்போலியன்
பெயரில் சரக்கை விற்பது நியாயமா..?” 
(twitter.com/gurussiva) 


3.     “கோவிலில் கடவுளை வைத்தது போலவே...
உண்டியலை வைத்ததும் மனிதனே..!” 
(twitter.com/mrithulaM)

Tuesday, 27 January 2015

படித்ததில் பிடித்தவை (கவிதை)


மரம்
"வீட்டில்
பறவை கூடொன்று
கண்டேன்...

வெளியில் பார்த்தேன்
வெகுதூரம் வரை
மரங்கள் ஏதுமில்லை..!

கால்கள் சுட,
சிறகுகள் வலிக்க,
பறவைகள் 
பறந்து கொண்டே
இருக்கின்றது...
மரங்களை தேடி..!

ஆடு,
மாடு,
கோழி,
நாய்
வளர்க்கலனாலும்
பரவாயில்லை...
நம் வீட்டில்
ஒரு மரமாச்சும்
வளர்ப்போம்..!"
                   -  தினேஷ்.

Saturday, 24 January 2015

(அ)சைவம்


“என்ன பெரிய
சைவம் – அசைவம்..?

அசைவம் ஐந்தறிவை
கொன்று சாப்பிட்டால்...
சைவம் ஓரறிவை
கொன்று சாப்பிடுகிறது..!”
         -  K. அற்புதராஜு.

*** ** ***
[ஓரறிவு கொண்ட உயிரினங்கள்: 
மரம், செடி, கொடி, புல், பூண்டு போன்ற தாவர இனங்கள்.
ஈரறிவு கொண் உயிரினங்கள்:
நத்தை, சங்கு (இதற்கு உடல், வாய் ஆகிய இரண்டு உறுப்புகள் மட்டுமே உள்ளது.)
மூவறிவு: எறும்பு, கரையான், அட்டை.
நாலறிவு: நண்டு, தும்பி, வண்டு.
ஐயறிவு: விலங்குகள், பறவைகள்.
ஆறறிவு: மனிதர்கள்]

Monday, 19 January 2015

நகரத்து விவசாயி...


“குறுவை, சம்பா, தாளடி என
மூன்று போகம் நெல் சாகுபடி.
ஊடு பயிராக உளுந்து, பயிறு.
தோட்டத்தில் வெண்டை, கத்தரி,
கீரை, அவரை, கொத்தரை,
புடலங்காய், பீர்க்கங்காய்,
பரங்கி, பூசணி, வெள்ளரி என
விதவிதமாய் கிராமத்தில்
விளைவித்த அப்பா...

வயதானதும் நகரத்தில்
மகன் கட்டிய வீட்டின்
மொட்டை மாடியில்
வெண்டைச்செடியை
தொட்டியில் வளர்த்து
அதில் வரும்
வெண்டைக்காயை
பறிக்கும்போது
பாரமாகிதான் போகிறது 
மனசு..!”

                      -  K. அற்புதராஜு.

Thursday, 15 January 2015

எனக்கு பிடித்த புத்தகங்கள்



1.          கு. அழகிரிசாமி சிறுகதைகள்
(தொகுப்பாசிரியர்: கி. ராஜநாராயணன்),
சாகித்திய அகாதெமி வெளீயீடு. 


2.          கோகிலா என்ன செய்துவிட்டாள்?
– ஜெயகாந்தன்,
மீனாட்சி புத்தக நிலையம். 


3.          ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
– ஜெயகாந்தன்,
மீனாட்சி புத்தக நிலையம். 


4.          இரண்டாம் இடம்
– எம்.டி.வாசுதேவநாயர்
(தமிழ் மொழிபெயர்ப்பு: குறிஞ்சிவேலன்),
சாகித்திய அகாதெமி வெளீயீடு. 


5.          பருவம்
– பாவண்ணன்,
     (கன்னட மூலம்: எஸ். எல். பைரப்பா),
சாகித்திய அகாதெமி வெளீயீடு. 


6.          சுஜாதாவின் அனைத்து படைப்புகளும். 


7.          ஜெயகாந்தன் சிறுகதைகள்,
நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா.


8.          சோளகர் தொட்டி
– ச. பாலமுருகன்,
எதிர் வெளியீடு. 


9.          புதுமைப்பித்தன் சிறுகதைகள்
(தொகுப்பாசிரியர்: மீ.ப. சோமசுந்தரம்),   
நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா. 


10.      பிரேம்சந்தின் சிறந்த சிறுகதைகள்
முதல் தொகுதி
சாகித்திய அகாதெமி வெளீயீடு.

-   K. அற்புதராஜு.
(E-Mail: arputharaju_k@yahoo.co.in)   

Sunday, 11 January 2015

தமிழின் சிறந்த நாவல்கள் (எழுத்தாளர் பாவண்ணன்)


எழுத்தாளர் பாவண்ணன் தேர்வு செய்த தமிழின் சிறந்த நாவல்கள்:


              1.                  பொய்த்தேவு                   - க.நா. சுப்பிரமணியம்
2.                  ஒரு புளிய மரத்தின் கதை      - சுந்தர ராமசாமி
3.                  மோகமுள்                     – தி. ஜானகிராமன்
4.                  நித்யகன்னி                    - எம்.வி. வெங்கட்ராம்
5.                  வாடிவாசல்                    - சி.சு. செல்லப்பா
6.                  சாயாவனம்                    - சா. கந்தசாமி
7.                  பிறகு                          - பூமணி
8.                  ஜே ஜே சில குறிப்புகள்         - சுந்தர ராமசாமி
9.                  கூனன் தோப்பு                 - தோப்பில் முகமது மீரான்
10.               சதுரங்க குதிரைகள்             - நாஞ்சில்நாடன்
11.               விஷ்ணுபுரம்                   - ஜெயமோகன்
12.               தலைமுறைகள்                - நீல. பத்மநாபன்
13.               கோபல்ல கிராமம்              - கி. ராஜநாராயணன்
14.               காடு                           - ஜெயமோகன்
15.               ஏழாம் உலகம்                 - ஜெயமோகன்
16.               நெடுங்குருதி                   - எஸ். ராமகிருஷ்ணன்
17.               யாமம்                         - எஸ். ராமகிருஷ்ணன்
18.               மாதொருபாகன்                - பெருமாள் முருகன்
19.               மணல் கடிகை                 - எம். கோபாலகிருஷ்ணன்
20.               கூகை                         - சோ. தர்மன்
21.               காவல் கோட்டம்               - சு. வெங்கடேசன்
22.               ஆழிசூழ் உலகு                 - ஜோ.டி. குரூஸ்
23.               யாரும் யாருடனும் இல்லை    - உமா மகேஸ்வரி
24.               நெடுஞ்சாலை                  - கண்மணி குணசேகரன்
25.               முறிமருந்து                    - எஸ். செந்தில்குமார்
26.               சிலுவைராஜ் சரித்திரம்         - ராஜ் கெளதமன்






                                                                      *** **** ***