எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday, 1 May 2014

படித்ததில் பிடித்தவை (ஆண்கள் இல்லாத வீடு - கவிதை)


ஆண்கள் இல்லாத வீடு

“குளியல் அறை கதவைச் சாத்துவதில்
அக்கறை இருப்பதில்லை.
சமையலில் ஒரு அலட்சியம்.
ஆடைகள் திருத்துவதில் கவனம் இல்லை.
அண்டை வீட்டாருடன் குறைவான பேச்சு.
அழைப்பு மணியடித்தால் பதற்றம்.
கதவைத் திறக்கும் போது மிரட்சி.
உறவினர், நண்பர்கள் வருகைகள்
அரிதாகிப் போகும்.
இரவாகும் முன்பே இருளாகிவிடும்.
நடையுடை பாவனைகளில்
ஒருவித உயிரற்றத்தன்மை.
இரவில் ஒவ்வொரு முறை
கதவடைக்கும் போதும்
இன்னமும் யாரோ வரவேண்டும்
என்றோர் உணர்வு.
யாரும் திரும்பப்போவதில்லை
என்பதை வீடு அறிந்திருக்கும்..!”

                                           -  நர்மதா குப்புசாமி.

No comments:

Post a Comment