எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday, 2 March 2014

படித்ததில் பிடித்தவை (தேடாதே... - கவிதை)


“அறை நண்பனின்
கைபேசியைக் காணவில்லை.

கடைசியாகப் பேசி முடித்து
எங்கே வைத்தாய்?
ஜன்னல் வழியாக
விழுந்திருக்குமோ?

கேட்டுக் கொண்டே
எல்லா இடங்களிலும்
தேடிக் கொண்டிருந்தோம்... 
நாங்கள்.

நண்பனோ...
எங்கள் முகங்களில்
தேடிக் கொண்டிருந்தான்..!”

                                        -    ஆ. கீதம்லெனின்.

No comments:

Post a Comment