எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday, 17 March 2014

சென்னை இயந்திரங்கள்


                                                                                 

“சென்னை சென்ட்ரல்
ரயில்வே பிளாட்பாரத்தில்
ரயிலை விட்டு 
இறங்கி நடக்கையில்...

முன்னால் செல்பவரின்
சட்டை பின்புறத்தில்
நெளிந்த புழுவை தட்டிவிட்டான்
அவருக்கு பின்னாலே வந்தவன்.

நிலை குலைந்து போன அவர்
என்ன நடந்தது என தெரியாமல்
சற்றே குழம்பி, பின் புரிந்துகொண்டு
சகஜ நிலைமைக்கு திரும்பி
நன்றி சொல்வதற்குள்
அவன் அவரை கடந்துவிட்டான்!”

                                  -     K. அற்புதராஜு.

No comments:

Post a Comment