எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday, 13 November 2014

படித்ததில் பிடித்தவை (கவிதை)


“இலைகள் மல்லாந்து படுத்து வானம் பார்க்க...
தார்ச் சாலைகள்  செஞ்சிவப்பில் குளிக்க...
தூசிகள் பேருந்துகளை துரத்தாமல் ஓய்வெடுக்க...
கூடு அடையும் மகிழ்வோடு பேருந்துகள்
ஒன்றையொன்று துரத்த...
அந்த உன்னத மாலைப்பொழுதில்
ஓர் அசிங்கப் பார்வையில்
என்னை கேவலப்படுத்திச் செல்கிறான்
அந்த மனிதன்..!”
                                            -   வெண்ணிலா.

(பெண்ணுக்கே உண்டான அவஸ்தையும் தவிப்பும் 
இயல்பாக மிளிர்கிறது - சுஜாதா)

Monday, 10 November 2014

படித்ததில் பிடித்தவை (கவிதை)


“பிடிக்கவில்லை திரைப்படம்
பார்த்துக் கொண்டிருக்கிறேன்...
பிடித்திருக்கிறது
உன்னுடன் உட்கார்ந்திருப்பது.

மோசமாகத் திட்டினேன்
தீப்பெட்டி கேட்ட போது...
சிரித்து மறுத்து
நீ புகைத்து உதிர்த்த
வெண் சாம்பலையும்
சிகரெட் துண்டையும்
பார்த்திருந்தல் தரும்
சிலிர்ப்புக்காகத்
தெரிந்தே தினமும்
பெருக்காமல் விட்டு விடுகிறேன்
அந்த ஜன்னலோரத்தை மட்டும்..!”

- இளம்பிறை (பனிக்காலப்பதிவுகள்)

Sunday, 9 November 2014

நகரத்துப் பெண்கள்...








“நகரங்களில்...
எஜமானி பெண்கள்
உடல் பயிற்சி செய்தும்...

வேலைக்காரப் பெண்கள்
வீட்டைப்பெருக்கி,
துணியை துவைத்து,
சமையல் செய்தும்...
ஆரோக்கியமாக 
இருக்கிறார்கள்..!”


          -  K. அற்புதராஜு.

Saturday, 8 November 2014

பார்த்ததில் பிடித்தது (Mathematics - ALGEBRA)


Mathemagic - (a+b)²=a²+2ab+b²  But Why?



Video:




One of the elementary formula in high school mathematics, most of us know this formula.
But do we actually know why?
In this video Khurshed Batliwala, fondly called as Bawa, explains the reason behind this.
With a gold medal in Mathematics from IIT, Bombay, India, Khurshed is a faculty of The Art of Living founded by His Holiness Sri Sri Ravi Shankar.

According to Bawa he thought it is better to teach people how to breathe and make them happy than teach them Mathematics and make them miserable.


Download Link: http://www.youtube.com/watch?v=49_TJymgXgM

DISCLAIMER:

This video is posted for viewing pleasure and an information for the viewers. By this, I don't wish to violate any copyright owned by the respective owners of this video.

I don't own any copyright of this video. If this video is in violation of the copyright you own then, please let me know (E-Mail: arputharaju.k@gmail.com), I will remove it from my Blog.


** ** ** ** **

Friday, 7 November 2014

இடம்


“பேருந்து நிறுத்தத்துக்கு
வந்த காலியான
பேருந்தில் ஏறி
உட்காரச் சென்ற
இளைஞன்...

மாற்றுத்திறனாளி /
முதியோர் இருக்கை
அறிவிப்பு ஸ்டிக்கரை
பார்த்தவுடன்
உட்காராமல்
பின்பக்க இருக்கையில்
உட்கார்ந்தான்...

பேருந்தின் அனைத்து
இருக்கைகளும்
நிறைந்தப்பின்...

அடுத்த நிறுத்தத்தில்
ஏறிய மாற்றுத்திறனாளி
அவருக்கு ஒதுக்கப்பட்ட
இருக்கைக்கு செல்லாமல்
இளைஞன் அருகில்
சென்றவுடன்...

அவன் எழுந்து தனது
இடத்தில் அவரை  
உட்கார வைத்து
எல்லோர் மனதிலும்
இடம் பிடித்தான்..!”

               -  K. அற்புதராஜு.

Thursday, 6 November 2014

படித்ததில் பிடித்தவை (கவிதை)



“சிறு வயதில்
ரயில் பயணங்களில்
மரங்கள்
பின்னால் ஓடுவதாய்
ஆச்சர்யப்பட்டுள்ளேன்.

இப்போது
என் மகள்
கட்டிடங்கள்
பின்னால் ஓடுவதாக
ஆச்சர்யம் காட்டுகிறாள்..!”

                                         -  பா. ராஜா.


** ** ** ** **

Wednesday, 5 November 2014

படித்ததில் பிடித்தவை (ஈழத்துக்கவிதை)


“அசோகவனங்கள்
அழிந்து போய் விடவில்லை.
இதே வீடே
எனக்கான அசோகவனமாயுள்ளது.

ஆனால்
சிறைப்பிடித்தது
ராவணனல்ல
ராமனேதான்.

ராமனே ராவணனாய்
தனது அரசிருக்கையில்
முதுகுப்புறமாய்
முகமூடிகளை மாற்றிக்கொண்டதைப்
பார்க்க நேர்ந்தன கண்கள்.

இதயம்
ஒரு முறை அதிர்ந்து நின்றது..!”

                               -  ஈழத்துக்கவிஞர் செல்வி.

Tuesday, 4 November 2014

அட்சதை தூவி...


“கல்யாண மண்டபத்தில்
முகூர்த்த நேரத்தில்
கடைசி வரிசைக்கு
முன்னால் அமர்ந்திருக்கும்
அனைவருமே...

மணமக்களுடன் சேர்ந்தே
அட்சதை தூவி
ஆசிர்வதிக்கப்படுகிறார்கள்..!”

                                    -  K. அற்புதராஜு.

Monday, 3 November 2014

படித்ததில் பிடித்தவை (கவிதை)


மரத்தைப் பிரசவிக்கும் பறவை
“ஒரு மரத்தை
வெட்டும்போது
ஒரு பறவை
கதறும்.

எரிச்சல் கொள்ளத்தேவை இல்லை.

எங்கோ
ஒரு பழத்தை உண்டு
சிதைக்கவியலாத
அதன் விதையைச் சுமந்து
கழித்து...
பின்னது பயிராகி...
செடியாகி...
மரமாவதைப்
பார்த்து ரசித்திருந்தால்
நமக்கதன்
வேதனை புரியும்..!”

நாவிஷ் செந்தில்குமார்.

Saturday, 1 November 2014

தொடர்பு எல்லைக்குள் நானும் சிட்டுகுருவியும்...


“நெடுநேரம் சிக்னலுக்காக
காத்திருந்த ரயிலின்
ஜன்னல் ஓர இருக்கையில்
நான்...

என்னோட ப்ளாக்,
யாஹூ மெயில்,
முகநூல்,
வாட்ஸ் ஆப்,
ட்விட்டர்,
தமிழ் ஹிந்து...
என கைப்பேசியில்
மேய்ந்துவிட்டு
ஜன்னல் வெளியே
பார்த்தப் போதுதான்
கவனித்தேன் அந்த
சிட்டுக்குருவியை...

புல்லின் மீது
பனித்துளிகளை
உறிஞ்சியப்படியே...
சிறிய பூக்களை
உரசியப்படியே...
துள்ளிக்குதித்து
சுற்றும் முற்றும்
பார்த்தப்படியே...
கீச்...கீச்சென
ஒலி எழுப்பி...
சிறு சத்தத்துக்குக்கூட
அதிர்ந்து...

அப்படியே நான்
வேறு உலகத்தில்
இருந்தப்போதுதான்
நண்பனின் அழைப்பால்
கைப்பேசி சிணுங்கியது...

எனது தொடர்பு எல்லையை
விட்டுப்பறந்தது சிட்டுக்குருவி..!”
                - K. அற்புதராஜு.
    [எனது 100-வது கவிதை]