எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 1 November 2014

தொடர்பு எல்லைக்குள் நானும் சிட்டுகுருவியும்...


“நெடுநேரம் சிக்னலுக்காக
காத்திருந்த ரயிலின்
ஜன்னல் ஓர இருக்கையில்
நான்...

என்னோட ப்ளாக்,
யாஹூ மெயில்,
முகநூல்,
வாட்ஸ் ஆப்,
ட்விட்டர்,
தமிழ் ஹிந்து...
என கைப்பேசியில்
மேய்ந்துவிட்டு
ஜன்னல் வெளியே
பார்த்தப் போதுதான்
கவனித்தேன் அந்த
சிட்டுக்குருவியை...

புல்லின் மீது
பனித்துளிகளை
உறிஞ்சியப்படியே...
சிறிய பூக்களை
உரசியப்படியே...
துள்ளிக்குதித்து
சுற்றும் முற்றும்
பார்த்தப்படியே...
கீச்...கீச்சென
ஒலி எழுப்பி...
சிறு சத்தத்துக்குக்கூட
அதிர்ந்து...

அப்படியே நான்
வேறு உலகத்தில்
இருந்தப்போதுதான்
நண்பனின் அழைப்பால்
கைப்பேசி சிணுங்கியது...

எனது தொடர்பு எல்லையை
விட்டுப்பறந்தது சிட்டுக்குருவி..!”
                - K. அற்புதராஜு.
    [எனது 100-வது கவிதை]

2 comments:

  1. அருமையான நூறாவது பதிவு. வாழ்த்துக்கள். தொடரட்டும் இனிதே.

    ReplyDelete