எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday, 11 April 2014

பழையவை கழிதல்

                                                                         
“நீர்நிலைகள் இல்லாத
நகரங்களில்
சூரியன் உதிப்பதற்க்கு
முன்பாகவே இருட்டில்
வீட்டிலிருக்கும் பழைய
சுவாமி சிலைகளையும்,
படங்களையும்
பிள்ளையார் கோவிலில்
வைப்பவர்கள் எல்லோருமே...

பிள்ளையார் கோவில்
அய்யருக்குதான்
பயப்படுகிறார்களே தவிர
பிள்ளையாருக்கு
பயப்படுவதில்லை..!”
           
                  -   K. அற்புதராஜு.

Thursday, 10 April 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

                                                       
1. “பிள்ளையாரிடம்
   பக்தன்
   வரம் கேட்டான்
   தொப்பைக் குறைய...”
                      
                                     -   ஆசுரா.



                                         

2. “விபத்தில் கையிழந்தவன்
   நினைவில் ஈரமாய்
   விரல் சூப்பிய நாட்கள்..!”

                                    -    முருகேஷ்.

Wednesday, 9 April 2014

சமநிலை பெறுதல்...

                   

அலுவலகத்தில் அவசர வேலை
மூன்றாவது மாடியிலிருந்து
இரண்டாவது மாடிக்கு
இரண்டு இரண்டு படிகளாக
வேகமாக இறங்கும் நான்...

முன்னால் மாற்று திறனாளி ஒருவர்
கைப்பிடியைப் பிடித்துக்கொண்டு
அடிமேல் அடி வைத்து மெதுவாக
இறங்குவதை கண்டப்பின்...

ஏதோ ஒரு அனிச்சை செயலாய்
நானும் மெதுவாக இறங்கத்
தொடங்கினேன்..!”
    -    K. அற்புதராஜு.

Tuesday, 8 April 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

                 
1. “எனக்கு எதிரே
   யார் பணம் எண்ணினாலும்
   நானும் மனசுக்குள்
   எண்ண ஆரம்பித்துவிடுகிறேன்
   அவரை விட சரியாக..!”

                                              -   மதிபாரதி.


2. “எல்லோருமே
   எண்ணிப் பார்க்கிறார்கள்
   யாருமே நம்பவில்லை
   பணத்தை..!”

                                               -    துரை.

Monday, 7 April 2014

*பூச்சாண்டி*



கரடு முரடான

தோற்றத்துடன்,

கன்னங்கரேலென,

வாட்ட சாட்டமாக,

வில்லன் போல

இருப்பவர்கள்

எல்லோருமே...

 

அம்மாக்கள்

குழந்தைகளை

பயமுறுத்தி

சோறு ஊட்ட...

 

தெரிந்தோ,

தெரியாமலோ

பூச்சாண்டியாக

உதவியிருப்பார்கள்..! 

 


*
கி.அற்புதராஜு*

Sunday, 6 April 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

                                                                                 
1. “ரசிப்பதற்கு
   ஒருத்தி இருக்கிறாள்
   என்பதை விட
   வேறென்ன வேண்டும்
   வாழ்க்கையை ரசிக்க..!”

                                   -   கோபிநாத்.
                               

2. காந்தி மகான்
   எளிமைதான்...

   காட்சியளிப்பதோ
   ஐநூறு ரூபாய்
   நோட்டில்..!”
      
              -   வா.மு.சே.ஆண்டவர்.

Saturday, 5 April 2014

படித்ததில் பிடித்தவை (கவிஞர். அறிவுமதி கவிதைகள்)

                                                                                         
1. “இரவு முடிந்த விடியலில்
   எப்படித்தான் சந்திக்கிறார்களோ
   மணமக்கள் எல்லோரையும்..!”

                                    - கவிஞர். அறிவுமதி.

                                             

2. “என்
   பலவீனங்களின்
   காட்டில்
   சுள்ளி
   பொறுக்காதே..!”

                                  - கவிஞர். அறிவுமதி.

Friday, 4 April 2014

பெவிகால் குழந்தைகள்...

                                                                     

தாத்தா, பாட்டி,
அப்பா, அம்மாவுக்குமான
மன இடைவெளியை...


குழந்தைகள்தான்
குறைத்து இணைக்கிறார்கள்..!”
      
             -    K. அற்புதராஜு.

Thursday, 3 April 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

                                                                                   
1. “உள்ளதில்
   சிறந்த புகைப்படத்தைத்தான்
   பெண் வீட்டுக்கு அனுப்பினேன்...

   வந்ததில் சிறந்த புகைப்படத்தைத்
   தேர்வு செய்திருப்பார்கள் போல...

   பதில் இல்லை..!”

                                                -   பா. ராஜாராம்.

                                               

2. “தலையணை அருகே
   தைலம்
   ஒவ்வொரு வீட்டிலும்
   வெவ்வேறு வாசனையோடு...”


                                                 -   நலங்கிள்ளி.

Wednesday, 2 April 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

                                                                                           
1. “பள்ளிக்கு அனுப்பும்
   முதல் நாளில் தொடங்குகிறது...
   குழந்தையைப் பற்றிய
   அம்மாவின் அச்சம்..!”

                                        -     கவிதா பாரதி.

                                           

2. “நடத்துனரிடமிருந்து கைமாறிய
   பயணச் சீட்டும் மீதப் பணமும்
   ஐந்தாறு நபர்களைக் கடந்து
   அவளைச் சென்றடைகையில்
   அவள் சொன்ன நன்றி
   யாரை சென்றடையும்..?”


                                         -    சுதா நடராசன்.

Tuesday, 1 April 2014

காவு

                                                                     
“தண்டவாளத்தை
கடக்கும் போது
ரயிலில் அடிப்பட்டு
தூக்கி ஏறியப்பட்டவன்
துடிதுடித்து
இறந்துப்போனான்.

அவன் பாடல் 
கேட்டு வந்த
அலைப்பேசி
பாடிக்கொண்டு
உயிருடன்தான்
இருந்தது
அவனுக்கு அருகிலேயே...”

        -   K. அற்புதராஜு.