எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 18 August 2023

*பூக்கள் பூக்கும் தருணம்*

 


ரயில் பயணத்தில்

இருக்கை கிடைக்காமல்

நிற்கிறார் முதியவர்.

முன்னும், பின்னும்

பரபரப்பாக தேடுகிறார்

இருக்கை கிடைக்குமாவென...

அவரது பார்வையைத் தொட்டு

எழுந்து இடம் கொடுக்கிறேன்.

உட்கார்ந்தவர் நன்றியோடு பார்க்கிறார்.

அவரருகில் நின்றுக்கொள்கிறேன்.

 

என் மனம் மகிழ்கிறது.

 

நான் இறங்கப் போகிறேன்

என நினனத்திருப்பார் போல...

நான் நிற்பதைப் பார்த்ததும்

எனக்கு இடம் தேடி

மீண்டும் பரபரப்பானார்.

 

சில நிறுத்தங்களுக்குப் பிறகு

எதிர் இருக்கை காலியாகிறது.

மற்றவர்கள் உட்காரும் முன்

அந்த இடத்தைப் பிடித்து

என்னை உட்கார சொல்கிறார்.

சிறிய புன்முறுவலோடு பார்க்கிறார்.

நானும் புன்னகைக்கிறேன்.

 

இப்போது

அவரது மனமும் மகிழ்ந்திருக்கும்..!

 


*
கி. அற்புதராஜு*

22 comments:

  1. சிறிய நிகழ்வு ஆனா அழகான வரிகள்

    ReplyDelete
  2. J. செந்தில் குமார்18 August 2023 at 09:18

    அருமை.

    ReplyDelete
  3. K. பாலாஜி18 August 2023 at 09:21

    இரயில் பயண
    அனுபவ வரிகள்.
    அருமை.
    👏👏👏👏👏👍👌

    ReplyDelete
  4. S. மோகன்தாஸ்18 August 2023 at 09:27

    👌🏻👍

    ReplyDelete
  5. நிச்சயம் மகிழ்ந்திருக்கும். அருமை

    ReplyDelete
  6. கெங்கையா18 August 2023 at 10:26

    இரயில் பயணம்
    உண்மையில்
    மிக மிக அருமை.

    ReplyDelete
  7. ஆடலரசு18 August 2023 at 10:27

    அருமை.

    ReplyDelete
  8. சிவபிரகாஷ்18 August 2023 at 10:40

    வணக்கம்.
    ரயில் பயணங்களில் என்று
    ஒரு கவிதை தொடர்/தொகுப்பு
    எழுதலாமே?

    ReplyDelete
  9. நல்லதம்பி18 August 2023 at 10:44

    நிஜமாகவே
    அற்புதமான மனதின்
    சிறகை விரித்தது.
    🙏🏻

    ReplyDelete
  10. நந்தினி18 August 2023 at 11:50

    👍

    ReplyDelete
  11. பிரபாகரன் R18 August 2023 at 12:55

    🙏

    ReplyDelete
  12. Super Sir.
    🌹🌹🌹

    ReplyDelete
  13. வெங்கட்ராமன், ஆம்பூர்.18 August 2023 at 13:45

    👏👏💐💐🙏🏻🙏🏻

    ReplyDelete
  14. நரசிம்மன் R.K18 August 2023 at 13:49

    👍👍

    ReplyDelete
  15. நட்பு பூக்கள்

    ReplyDelete
  16. சுகிர்தா18 August 2023 at 16:05

    ❤️

    ReplyDelete
  17. Really nice.
    True incidents
    for us....😀

    ReplyDelete