*இடம் பெயர்தல்*
“காலாற வரப்பில் நடந்து
சில பல
பனைகளை கடந்து
வேலங்குச்சி
உடைச்சி
பல்
துலக்கி...
ஏரி மதிலில் கால் கழுவி...
அப்படியே
கொஞ்சம்
இறங்கி
தலைமுழுகி...
கட்டியிருக்கும்
வேட்டியையும்
சட்டை
போட்டுக்கொள்ளா
துண்டையும்
அலசி...
கட்டிக்
கொண்டு வீடுவரும்
காய்ந்து
போன நினைவுகளூடே...
மகனோடு
சென்னையில்
பிடுங்கி
நடப்பட்ட முதியவரும்...
அடைபட்டுக்கிடந்த
நிலநீரும்...
அடுக்குமாடி
நீச்சல் குளத்தில்...
ஒருவருக்கொருவர்
தத்தம்
பிம்பங்களை
பார்த்துக்
கொண்டார்கள்...
அதில்
ஒரு கிராமம்
பட்டுபோய்
கிடந்தது..!”
-
- கா. பாபுசசிதரன், 22.03.2020,
(அடுக்குமாடி கவிதைகள்).- கா. பாபுசசிதரன், 22.03.2020,
No comments:
Post a Comment