எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday, 19 November 2018

படித்ததில் பிடித்தவை (‘தீக்குச்சி’ – கவிக்கோ. அப்துல் ரகுமான் கவிதை)



தீக்குச்சி


தீக்குச்சி   
விளக்கை ஏற்றியது. 

எல்லோரும்
விளக்கை வணங்கினார்கள்.

பித்தன் 
கீழே எறியப்பட்ட 
தீக்குச்சியை  வணங்கினான்.

ஏன் தீக்குச்சியை
வணங்குகிறாய்?
என்று கேட்டேன்.  

ஏற்றப்பட்டதை விட
ஏற்றி வைத்தது
உயர்ந்ததல்லவா என்றான்.

-   கவிக்கோ அப்துல் ரகுமான்.
(ஆசிரியர்களுக்கு சமர்ப்பணம்)

2 comments:

  1. முதல் மூன்று பத்திகளுடன் முடித்து 'ஏன்'ஐ வாசகர்கள் கற்பனைக்கு விட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். 'ஆசிரியர்களுக்கு சமர்ப்பணம்'என்ற குறிப்பு வேறு உள்ளதே.

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர்களுக்கு சமர்ப்பணம் என்ற குறிப்பு நான் சேர்த்தது.

      Delete