“மாநகரத்தை நோக்கிய
பயணத்தில்
அந்த புறநகர்
ரயில் நிலையத்தில்
வந்து நின்ற மின்சார ரயிலின்
சன்னல் வழியே
பார்த்தப் போது
புதரின் மீது அபூர்வமாக
ஒரு கொக்கு தெரிந்தது.
கழுத்தை வளைத்து நெளித்து
ரயிலையே பார்த்துக் கொண்டிருந்தது.
நடைமேடை இருக்கையில்
இரு பெண்கள்
உட்காரும் வரை
கொக்குக்குள் நான்.
அதற்குப் பிறகு
இரண்டு பெண்களுக்குமான
இடைவெளியில்தான்
கொக்கு தெரிந்தது...
அந்த நொடிப் பொழுதில்...
அதுவரை கைபேசியை
பார்த்துக் கொண்டிருந்த
எதிர் இருக்கைக்காரர்
என்னைப் பார்த்ததும்,
அந்த பெண்கள்
என்னைப் பார்த்ததும்,
கொக்கு பறந்ததும்,
ரயில் புறப்பட்டதும்
ஒரே நேரத்தில் நிகழ்ந்தது..!”
- கி. அற்புதராஜு.
பறவை ஒன்று.
ReplyDeleteபார்வை பலவிதம்.
அருமையான புனைவு.