எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday, 3 April 2015

படித்ததில் பிடித்தவை (செல்வராஜ் ஜெகதீசன் கவிதை)


குழந்தைக் கேள்விகள்?
“ஏன்
வீடு திரும்ப வேண்டும்?

ஏன்
சக்கரங்கள் சுழல்கின்றன?

ஏன்
அம்மா வேலைக்குப் போவதில்லை?

எங்கே போகிறார்கள் எல்லோரும்
இத்தனை வாகனங்களில்?

வளர்ந்த பின்தான்
வேலைக்குப் போகணுமா?

சாலையோரப் பூனைகளுக்கு
யார் சாதம் தருவா?

குழந்தைத்தனமாகவே இருப்பதில்லை
எப்போதும்
குழந்தைகளின் கேள்விகள்..!”

                               -  செல்வராஜ் ஜெகதீசன்.

No comments:

Post a Comment