எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 14 April 2015

நானும் எலும்பிச்சைச்செடியும்...


“வார நாட்களில்
காலையில்
குளிப்பதற்கு முன்
பாத்ரூமில் தண்ணீரை
திறந்துவிட்டு
ஞாயிற்றுக்கிழமை
செய்ய மறந்த
கை நகம் வெட்ட தொடங்கி
கால் நகம் முடிப்பதற்குள்...

வாளியிலிருந்து
வழிந்தோடும் தண்ணீரை
அப்பாவோ, அம்மாவோ
பார்த்தால்
நிறுத்தி விடுவார்கள்.

மனைவி பார்த்தால்
என்னை திட்டிக்கொண்டே
நிறுத்துவார்.

மகன் பார்த்தால்
நிறுத்திவிட்டு
அம்மாவிடம் சொல்லிவிட்டு
எனக்கு கிடைக்கும்
திட்டை ரசிப்பான்.

இதையெல்லாம் மீறி
வழிந்தோடும் தண்ணீரால்
பயனடையும்
எலும்பிச்சைச்செடியை
நினைத்து சந்தோசப்பட்டு
கொள்வேன் நான்..!”

  -  K. அற்புதராஜு.

No comments:

Post a Comment