எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday, 12 February 2015

குளவிக்கூடு


வீட்டை சுத்தம்
செய்யும்போது
ஜன்னல் இடுக்கில்
குளவி கட்டியிருந்த
மண்க்கூட்டை
சுரண்டி எடுத்துவிட்டேன்...

கூட்டை தேடுமோ
குளவி என்று
இரவெல்லாம்
தூக்கம் வரவில்லை..!”

      - K. அற்புதராஜு.

2 comments:

  1. பரந்தாமன்16 February 2015 at 21:10

    அற்புதம்! உங்கள் கவிதைகள் அதிக இடைவெளியுடன் வந்தாலும் மனதை வருடாமல் போனதேயில்லை.

    ReplyDelete
  2. பகிர்ந்தமைக்கு நன்றி...

    ReplyDelete