எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday, 16 December 2013

தலை முடி


"தினந்தோறும் தேங்காய் எண்ணை,
சனிக்கிழமை நல்லெண்ணை சீயக்காய் குளியல்,
ஞாயிறு முட்டை தேய்த்துக்குளியல்,
அரசு விடுமுறை நாட்களில்...
கற்றாழை,
வெந்தயம்,
செம்பருத்தி என
விதவிதமான குளியல்!

அப்புறம்...
பாராசூட் தேங்காய் எண்ணை,
டாபர் அம்லா,
கேசவர்த்தினி எண்ணை,
ஹேர் டை...
என போராடியப்பின்...
     
கடைசியில்
வெள்ளை முடிதான்
ஜெயிக்கிறது..!"

         -   K. அற்புதராஜு.

Sunday, 15 December 2013

விருப்பப்பாடல்கள்...

                                                                                 
இளையராஜாவின்
இனிமையான
“இளங்காற்று வீசுதே...”
நிறுத்தப்பட்டு,
இரட்டை அர்த்த
குத்து பாட்டு
ஒலித்தது...

பேருந்துகளில்...
எப்போதுமே
ஓட்டுனர்களின்
விருப்பப்பாடல்களே
ஒலிக்கின்றன...’


-   K. அற்புதராஜு

Saturday, 14 December 2013

நாற்காலி

                                                                       
“வீட்டையோ...
அலுவலகத்தையோ...
சுத்தம் செய்பவர்கள்
எல்லோருமே...

நாற்காலிகளை
இருந்த இடத்தில்
வைப்பதில்லை!”


-   K. அற்புதராஜு

Wednesday, 11 December 2013

ரேகை ஜோதிடம்

                                                                                                   
மாநகரப்பேருந்தில்
ஓட்டுனர் இருக்கைக்குப்பின்னே
விளம்பரத்தில் எழுதியிருந்த...

தங்களது பெருவிரல்
ரேகை மூலம்
எத்தகைய தொழில்
செய்தால்
வெற்றியும், லாபமும்
பெறலாம் என்பதை
அறியலாம்.
ஜோதிட மேதை அ. கணேசேன்
044 – 45031111”

வாசகத்தை வாசித்து
சிரித்துக்கொண்டிருந்தார்
எனது பக்கத்து இருக்கையில்
உட்கார்ந்திருந்த அண்ணாச்சி!

அவர் இறங்கும் போதுதான்
கவனித்தேன்...
அவருக்கு வலது கையில்
பெரு விரல் இல்லை!

      -    K. அற்புதராஜு

Tuesday, 10 December 2013

பட்டினப்பிரவேசம்

                                               
                             
 “நகரத்தில்
 ஒவ்வொரு
 புது வீட்டிலும்
 கிராமத்திலிருந்து
 இடம் பெயர்ந்து...

 வளர்கின்றன...

                  தென்னையும்,
                  வாழைக்கன்றுகளும்...

                  நம்மைப்போலவே..!”


              -    K. அற்புதராஜு

Monday, 9 December 2013

நிலாவுக்குப் போவோம்

                                                           
"அவ்வை
பிராட்டியை
பார்க்க...

தமிழன்
எப்போது
சந்திரனுக்கு
செல்வான் ?"

-       K. அற்புதராஜு

Sunday, 8 December 2013

சிகரெட்

                                                                                 
    1.       “சாலையோர
 நடைப்பாதையில்
 புகைப்பிடித்தவனை
 மூச்சை அடக்கி
 தாண்டியப்பிறகு...
 முன்னாலும் ஒருவன்..!”
   
             2.   “புகைப்பிடிக்காதே!”
            என சுவற்றில்
            விளம்பரம் எழுதிக்கொண்டிருந்தவர்
            புகைத்துக்கொண்டிருந்தார்..!          

                                 -    K. அற்புதராஜு






Saturday, 7 December 2013

பிறந்த நாள் வாழ்த்து..!

                
 “அலைப்பேசி,                
 யாஹூ மெயில்,
 ஜி மெயில்,
 பேஸ் புக்,
 ட்விட்டர்
 ஞாபகப்படுத்துவதால்...
 அட..!
 எனது
 பிறந்த நாளும்
 வாழ்த்தப்படுகிறது..!”


-       K. அற்புதராஜு   

Friday, 6 December 2013

தோசை

                                                           
“ஹோட்டலில்
தோசை
சாப்பிடும் போதெல்லாம்...

சாலையோரக்கடைகளில்
தோசைக்கல்லை
துடைப்பத்தால்
சுத்தம் செய்வது
ஞாபகத்துக்கு
வந்து உறுத்துகிறது..!”

     -       K. அற்புதராஜு

Thursday, 5 December 2013

வட்டமிடும் பருந்து...

                                                                                             
 “வெட்ட வெளியில்
 யோகாசனம்
 செய்பவர்
 சவாசனம் (யோக நித்ரா)
 செய்து 
 கண் விழித்தப்போது...

 வானத்தில்
 வட்டமிடும்
 பருந்து..!”
             
         -    K. அற்புதராஜு


Wednesday, 4 December 2013

பரிசு

                                                                                           
"காலதாமதமாகதான்
 கூறப்பட்டது...
 'நன்றாய் இருந்தது'
 என்று!

 நண்பருக்கு
 ஒரு மாதத்திற்கு
 முன் கொடுத்த
 பரிசு பொருளுக்கு..!

 எனினும்… 
 அது சொல்லப்பட்டவுடன்தான்
 அந்த செயல் முழுமையடைகிறது..!"

                  - K. அற்புதராஜு

Tuesday, 3 December 2013

மதிப்பு



           "பிரயாணத்தின்
           முடிவில்
           மதிப்பிழந்துதான்
           போகிறது....
           பயணச்சீட்டு!"

               - K. அற்புதராஜு

Monday, 2 December 2013

தென்னை மரம்


“சுவையான இளநீர்...
குலைகுலையாய் தேங்காய்...
அழகான தென்னை மரம்தான்..!

வெட்டிக்கொண்டிருந்தனர்...

ஆஸ்பெஸ்டாஸ் கூரை வீட்டில்
வசிக்கும் அடுத்த வீட்டுக்காரரின்
தொந்தரவால்..!"

                                       - K. அற்புதராஜு