எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday, 5 April 2025

படித்ததில் பிடித்தவை (“மியாவ்” – கல்யாண்ஜி கவிதை)

 

*மியாவ்*


“மூன்றுமே 

வெவ்வேறு நிறம்.

அதனதன் நான்கு நாள் 

உலகை 

தனித் தனி 

மியாவ் கொண்டு

புகார்களை எழுதின...


ஒன்று படியேறி 

உள்ளே வந்து

அடுக்களைத் தரையை 

முகர்ந்து பார்த்தது.


இன்னொரு பழுப்பு, 

குழாயடிப் பக்கம் 

தண்ணீர்த் தகடை 

நக்கிப்  பார்த்தது.


மூன்றாம் சாம்பல், 

ஆசுவாசமாய்த் 

தரையில் அமர்ந்து 

தன்னைச் சுத்தம் செய்தது.


நான்கே நாட்களில் 

வாழ்வைப் புரிந்த 

மூன்றாவதை 

எனக்குப் பிடித்திருந்தது..!”

 

*கல்யாண்ஜி*

(2016)