“சாமி கும்பிட்டபின்
நூறு ரூபாய்க்கு
சில்லறை கேட்ட
பக்தனுக்கு
தீப ஆராதனை
தட்டிலிருந்து எடுத்து
பத்து பத்து ரூபாயாக
சில்லறை கொடுத்தார்
கோவில் அர்ச்சகர்.
அதிலிருந்து
பக்தன் கொடுத்த
பத்து ரூபாய்
தட்சணையை மறைத்து
நூறு ரூபாய் மட்டும்
தெரியும் படி
தட்டின் மீது
வைத்தார் அர்ச்சகர்.
அடுத்து வரிசையில்
வரும் பக்தர்கள்
நூறு ரூபாயாக
வைப்பார்களா என்று
அர்ச்சகரும்,
பரமனும்
அருகில் அமர்ந்திருக்கும்
பார்வதியும்
ஆவலுடன்
பார்த்துக்கொண்டிருந்தனர்..!”
-
கி.
அற்புதராஜு.
எதனால் பார்வதி மட்டும்?
ReplyDeleteஇப்போது பரமனும் பார்க்கத் தொடங்கிவிட்டார்...
ReplyDeleteசுட்டி காட்டியமைக்கு நன்றி..!