அங்கே முறிந்து விழுந்து கிடப்பது வெறும்
மரமன்று.
அங்கே முறிந்து விழுந்து கிடப்பது
வெறும் மரமன்று.
ஆயிரம் கிளிகளின் அந்தப்புரம்.
ஆயிரம் குயில்களின் பொன்னூஞ்சல்.
ஆயிரம் சிட்டுகளின் உப்பரிகை.
ஆயிரம் காகங்களின் நிழற்குடை.
ஆயிரம் மைனாக்களின் நடைமேடை.
ஆயிரம் எறும்புகளின் தனிநாடு.
ஆயிரம் ஈக்களின் உணவுத்தட்டு.
ஆயிரம் பூச்சிகளின் வளமாநிலம்.
ஆயிரம் மனிதர்களின் மூச்சுக்காற்று.
ஆயிரம் நீர்க்கால்களின் வேருறவு.
ஆயிரம் ஆண்டுகளின் உயிர்ச்சான்று.
ஆயிரம் ஆண்டுகளின் எதிர்காலம்.
அங்கே முறிந்து விழுந்து கிடப்பது
வெறும் மரமன்று.
- கவிஞர் மகுடேஸ்வரன்.
No comments:
Post a Comment