“அதிகாலை நான்கு மணிக்கு
அலாரம் அடித்து
அவசர அவசரமாக கிளம்பி
ஐந்து மணிக்கு
பூங்காவில் யோகா
முடித்தபின்
ஆறரைக்கு வீடு திரும்பி
காபி குடிக்கும் போதே
அவசரமாக தினசரி படித்து
மனைவி கூறும்
சிறு வேலைகள் செய்தப்பின்
சிறிது நேரம்
கணினியில் செலவிட்டு
ஷேவிங் செய்து
மறு குளியல் முடித்து
சாமி கும்பிட்டு
சாப்பிட்டு
ஐந்து நிமிடங்கள்
தாமதமாக கிளம்பி
பேருந்தில்
பிரயாணித்து
அலுவலகம் சென்றபின்
படிக்கவில்லையே
என உறுத்திக்கொண்டிருக்கிறது...
கிளம்பும் அவசரத்தில்
பிரிக்க முடியாமல்
ஒட்டிக்கொண்ட
தினசரியின் பக்கங்களில்
படிக்காத தினப்பலன்..!”
-
கி. அற்புதராஜு.
அருமை... குழந்தைகளுக்காக ஒதுக்கும் நேரத்தையும் சொல்லியிருக்கலாம்...
ReplyDelete