அழகாகி விடுகிறாள்...
“மாநகரப் பேருந்தில்
மாற்றுத்திறனாளிகள்
முதியோர் இருக்கையில்
அமர்ந்திருக்கும்
ஆரோக்கியமான
அந்த இளம் பெண்
அப்படி ஒன்றும்
அழகில்லை...
ஆனால்
அடுத்த நிறுத்தத்தில்
பேருந்தில் ஏறிய
அந்த வயதான
அம்மாவுக்கு
இடம் கொடுத்து
எழுந்து நின்றவள்
அவ்வளவு
அழகாகி விடுகிறாள்..!”
-
கி. அற்புதராஜு.
அருமை.
ReplyDeleteஉங்கள் கவிதையும் அழகாக உள்ளது, அந்தப்பெண்ணைப் போலவே.
ReplyDeleteஎனக்குப் பிடித்த பாடல்களுள் ஒன்றான 'அவள் அப்படி ஒன்றும் அழகில்லை..அவளுக்கு யாரும் இணையில்லை' நினைவுக்கு வந்து போட்டு கேட்டேன்.
ReplyDeleteஎனக்குப் பிடித்த பாடல்களுள் ஒன்றான 'அவள் அப்படி ஒன்றும் அழகில்லை..அவளுக்கு யாரும் இணையில்லை' நினைவுக்கு வந்து போட்டு கேட்டேன்.
ReplyDelete