எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 14 November 2015

படித்ததில் பிடித்தவை (ஒரே ஒரு குடை - கவிதை)


ஒரே ஒரு குடை
“அப்பாவுக்கும் எனக்குமாய்
ஒரே ஒரு குடை.

இன்னொரு குடைக்கான
தேவை இருப்பின்
அதை வாங்க
நானும் அவரும்
விரும்பியதில்லை.

மழை வரும்
குடை எடுத்து போடா என்று
என் கைகளில்
திணித்து விட்டு செல்கிறார்
அப்பா.

அவருக்கு தெரியாமல்
அந்த குடையை
அவரின் பையில்
வைத்துவிட்டு வெளியேறுகிறேன்.

அவர் என்னோடு
அதிகமாய் பேசமாட்டார்.
எல்லா அப்பாவும் அப்படித்தானோ...
அவரின் இந்த அன்புதான்
என்னோடு அதிகமாய் பேசும்.

அதனாலையே
அப்பாவையும் பிடிக்கும்.
அவரை என்னோடு
பேச வைக்கும் மழையையும்
பிடிக்கும்...”

- (மழை பயணம் வலைப்பூவிலிருந்து...)

5 comments:

  1. அப்பா மகனுக்காக மகன் அப்பாவிற்காக குடை ஒன்று வாங்காதது ஏன் என்ற கேள்வி என்னை குடைகிறது.

    ReplyDelete
  2. அப்பா மகனுக்காக மகன் அப்பாவிற்காக குடை ஒன்று வாங்காதது ஏன் என்ற கேள்வி என்னை குடைகிறது.

    ReplyDelete
  3. "இன்னொரு குடைக்கான
    தேவை இருப்பின்
    அதை வாங்க
    நானும் அவரும்
    விரும்பியதில்லை."
    என கவிஞர் விளக்கிவிட்டாரே...

    உங்களது கேள்வியில் "என்னை குடைகிறது" அருமை.

    ReplyDelete