தாமஸ்
டிஷ் என்ற அமெரிக்க எழுத்தாளரை சுஜாதா கண்ட நேர்காணலின் பின்வரும் பகுதி சுஜாதா
எழுத்துகளில் விரவிக் கிடக்கும் நகைச்சுவைக்கு ஒரு சோறு:
சுஜாதா: “மிஸ்டர் டிஷ், இந்தியாவில்
உங்கள் முதல் அனுபவங்கள் எவ்வாறு இருந்தன..?”
டிஷ்: “இந்தியாவில்
முதன் முதல் என்னைக் கவர்ந்தது பம்பாய் தெருவில் நான் பார்த்த பசுமாடுதான்.
போக்குவரத்தைப் பற்றிக் கவலையே படாமல் மெதுவாக மென்று கொண்டு அது நடந்து செல்ல
அதைப் பின் தொடர்ந்தேன். ஒரு மார்கெட்டை அணுகியது. அங்கே பார்த்தால் அதன் சகாக்கள்
ஒரு மந்தையே இருந்தன. சுதந்திரமாகச் சாப்பிட்டுக் கொண்டு... சாதுவாக... ஆஹா, நியூயார்க்கில்
இப்படி பசுக்கள் உலவினால் எவ்வளவு நன்றாக இருக்கும்.”
சுஜாதா: “நிச்சயம்
அனுப்புகிறோம்.”
***
*** *** ***
No comments:
Post a Comment