“ஒரு முறை
மரத்துக்கு கீழே
நிற்கும் போது
காக்கை எச்சமிட்டதால்
ஏற்பட்ட அச்சம்
அகலவில்லை
எப்போது மரத்துக்கு
கீழே நின்றாலும்...
சென்ற முறை
மரத்துக்கு கீழே
நின்ற போது
சட்டையின் பின்பக்கம்
ஏதோ விழுந்து
ஈரமானது...
மறுபடியும் காக்கையோ
என பார்த்தப்போது
அது மழைத்துளி...
இன்று மறுபடியும்
ஏதோ ஒன்று விழுந்தப்போது
பதறிப்போய் பார்த்தால்...
சொன்னால் நம்பமாட்டீர்கள்
பூக்கள்..!”
- K. அற்புதராஜு.
Super bro
ReplyDeleteVery nice
ReplyDeleteNice.
ReplyDelete