எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 27 June 2022

படித்ததில் பிடித்தவை (“மூக்குக் கண்ணாடி” – மதார் கவிதை)


 

*மூக்குக் கண்ணாடி*

 

மூக்குக் கண்ணாடி அணியாமல்

தூரக்காட்சிகளின் மங்கல்

எனக்கொரு தைரியத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தது

 

மேடை பயம் விலக

பள்ளி நாடகமொன்றில்

மூக்குக் கண்ணாடி அணியாமல்

நடித்த நாள்

நினைவிற்கு வந்தது

 

எதிர்வரும் மனிதர்கள்

கலங்கலாகிவிட்டனர்

இப்போது பயம் நீங்கிவிட்டது

 

பார்வைத் தெளிவெனும் அச்சம்

என் வீட்டுப் பரணில் கிடக்கிறது

 

எத்தனை நாள்

அதை

தூசி போகத்

துடைத்திருப்பேன்

 

அறியாமை

அறியாமை

 

அந்த பைனாக்குலர்

இனி எனக்கு வேண்டாம்

 

இனி தூரத்துப் பறவை

என் கண்களில் பறக்காது

 

அது வானத்தில் பறக்கிற

செய்தியை ஏந்தி வரும்

தபால்காரர் போதுமெனக்கு..!

 

 *மதார்*

(கல்குதிரை இதழ்)






4 comments:

  1. "நம் எல்லோரிடமும் இந்த
    மூக்குக் கண்ணாடி இருக்கிறது,
    அதைத் துடைத்து பளபளவென்று
    வைத்திருப்பதை சமூகம்
    பாராட்டிக்கொண்டே இருக்கும்,
    நாமும் அந்தச் செயலால்
    உவகையடைகிறோம்.
    ஆனால் கண்ணாடியை
    வீசியெறிந்துவிடக்கூடிய துணிவு
    மிகச் சிலருக்கே வாய்க்கிறது,
    அவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்,
    ‘விதி சமைப்பவர்கள்’, சிலர்
    அவ்வப்போது தூக்கியெறிகிறார்கள்.
    இதில் நீ எந்த வகை என
    இந்தக் கவிதை கேள்வி
    கேட்கிறது.
    கவிஞர் அபி ‘என்னுடைய
    தோல்விகளைத்தான்
    கவிதைகளாக எழுதுகிறேன்’
    என்று சொன்னார்,
    மதார் எப்படியோ..!"

    *பாலாஜி ராஜூ*

    கல்குதிரை, மதார்
    கவிதைகள் பற்றிய
    வாசகர் கடிதம்.

    https://www.jeyamohan.in/166951/

    ReplyDelete
  2. ஸ்ரீராம்27 June 2022 at 09:23

    கவிதையின் கருத்து
    உண்மை தான்.
    அச்சம் நம் மனதை விட்டு
    முழுவதுமாக என்று
    நீங்குகிறதோ...
    அன்றே புறச்சசூழ்நிலைகள்
    நம்மை பாதிப்பதில்லை..!

    ReplyDelete
  3. சீனிவாசன்27 June 2022 at 13:20

    👌👌👌

    ReplyDelete