எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 24 June 2022

படித்ததில் பிடித்தவை (“மேக தயவு” – மதார் கவிதை)

 


*மேக தயவு*

 

வந்த வேகத்தில்

திரும்பிச் சென்ற மழை

வந்தது எதற்கு

 

மறதி மேக தயவில்

வாசல்

நனைந்தது

 

இனி

கோலப் பொடியுடன்

நீ வரலாம்..!

 

 *மதார்*

(கல்குதிரை இதழ்)





2 comments:

  1. "அழகிய கவிதை.
    எதையாவது செய்யச் சென்று
    போகும் வழியில் அப்படியே
    மனதில் வெற்றிடமாய், வந்த
    வேலையை மறந்து சில நொடிகள்
    தவிக்கும் அனுபவத்தை
    எண்ணிக்கொள்கிறேன்.
    சிறு வயதிலேயே எனக்கு
    இது ஏற்பட்டிருக்கிறது.
    இங்கு மேகத்தை ‘Dementia’ உள்ள
    ஒரு பெரியவரோடு ஒப்பிட்டுப்
    பார்க்கிறேன்.
    கொஞ்சம் சிரிப்பு வருகிறது.
    ஜெயமோகன் எழுதிய
    ‘பிறசண்டு’ சிறுகதையின்
    சிரோமணி நினைவுக்கு
    வருகிறார்.
    பாவம் மேகம், சில கோலங்கள்
    வரையப்படுகின்றன."

    *பாலாஜி ராஜூ*

    "கல்குதிரை, மதார்
    கவிதைகள் பற்றிய
    வாசகர் கடிதம்."

    https://www.jeyamohan.in/166951/

    ReplyDelete
  2. ஸ்ரீராம்24 June 2022 at 17:11

    மிக அருமை.

    ReplyDelete